சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பி.ஜே.பி பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியோர் செல்லயிருந்த பாதையில் கண்ணிவெடிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் செல்ல இருந்த சிலமணி நேரத்திற்கு முன்னதாக 50 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டுகட்டமாக சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல்பிரச்சாரம் செய்வதற்காக தலைவர்கள் சத்தீஸ்கர் நோக்கி செல்லதுவங்கி உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல்பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிஜேபி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் பஸ்தார் செல்வதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னதாக மத்திய காவல்படையினர் நெடுஞ்சாலைகளில் அதிரடிசோதனை நடத்தினார்கள்.
சுக்மா மாவட்டத்தில் தோர்ண பாலுக்கும் ஜகர்குண்டாவுக்கும் இடையே நெடுஞ்சாலையில் கண்ணிவெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப் பதை வெடிகுண்டுநிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
இரும்பு பெட்டிக்குள் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் 25 கிலோ எடை கொண்ட இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை செயலிழக்கப்பட்டன. இதன்மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாதுகாப்புபடையினர் தெரிவித்தனர்.
இதே இடத்தில்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட்டு தீவிரவாதிகள் நடத்திய கொடூரதாக்குதலில் 76 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.