பாலியல்புகாரில் சிக்கிய தெகல்காபத்திரிகை ஆசிரியர் தருண்தேஜ்பாலை பாதுகாக்க மத்திய அமைச்சர் ஒருவர் முயற்சிக்கிறார்” என சுஷ்மாசுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.
தெகல்கா ஆசிரியர் தருண்தேஜ்பால் மீது அவருடன் பணியாற்றிய பெண் நிருபர் ஒருவர் பாலியல்புகார் கூறினார். இதை தொடர்ந்து , தெகல்கா ஆசிரியர் பொறுப்பில் இருந்து தேஜ்பால் விலகினார். அவர் மீது தெகல்கா நிறுவனம் எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்காததால், பெண்நிருபரும் தனது வேலையை ராஜினாமா செய்தார். கோவாவில் இந்த சம்பவம் நடந்ததால், இதுகுறித்து விசாரணையில் கோவா குற்றப் பிரிவு போலீசார் ஈடுபட்டனர். தேஜ்பால் மீது கோவாபோலீசார் பலாத்கார வழக்கு பதிவுசெய்தனர்.
கோவா போலீசார் நேற்று முன்தினம் மும்பைசென்று பெண் நிருபரிடம் வாக்குமூலம் பதிவுசெய்தனர். அவர் கோவாவந்து நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி, அவர் நேற்று கோவா வந்தார். விசாரணை அதிகாரிமுன் இன்று மாலை 3 மணிக்குள் ஆஜராகுமாறு தருண்தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விஷயத்தில் கோவாமுதல்வர் தேவையற்ற அக்கறை செலுத்துவதாகவும் , இந்தவழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேஜ்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்துதெரிவித்த பாஜக. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, ”குற்றத்திலிருந்து எளிதில்தப்பிக்க தேஜ்பால் வழிதேடுகிறார். காங்கிரசுக்கு தேஜ்பாலை பிடிக்கும். அவருக்கு காங்கிரசைபிடிக்கும்” என்றார்.
இந்நிலையில், ”தேஜ்பாலை பாதுகாக்கும் முயற்ச்சியில் தெகல்கா பத்திரிகையை நிறுவிய மத்தியஅமைச்சர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். அவருக்கு தெகல்காவில் பங்குகள் உள்ளன” என மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.