ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள சட்டப் பேரவை காலம் 6 ஆண்டுகள் என்பதை, 5 ஆண்டாக குறைக்கவேண்டும் என்று பாஜக. தேசியசெயற்குழு உறுப்பினர் ஜிதேந்திரசிங் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
மக்களவை தேர்தலுடன் ஜம்முகாஷ்மீரில் சட்டப் பேரவை தேர்தலை நடத்தும்விதமாக, மாநிலத்தில் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மாநாட்டுக்கட்சி-காங்கிரஸ் கூட்டணி, பேரவையில் சட்டம்கொண்டு வர வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவின் நன்மைகள்குறித்து நாடுமுழுவதும் விவாதம் எழுந்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் இணைந்து ஜம்முகாஷ்மீரில் சட்டப் பேரவை காலம் 6 ஆண்டுகள் என்பதை முடிவுக்கு கொண்டு வர இதுவே உகந்த தருணம்.
மாநிலத்தில் 370வது பிரிவு தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை ஓர் உதாரணம். 1975 முதல் 1977 வரை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அன்றையபிரதமர் இந்திராகாந்தி, மக்களவை தேர்தலை தள்ளிவைக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பில் (1976) 42 வது சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்தார்.
ஜம்முகாஷ்மீரில் இருந்த ஷேக்அப்துல்லா தலைமையிலான அரசு மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை பின்பற்றி, 1977ஆம் ஆண்டு மாநிலத்தின் சட்டப் பேரவைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக மாற்றிக்கொண்டது.
சட்டப்பேரவை காலம் 6 ஆண்டுகளாக இருப்பதால் ஏற்பட்டுள்ளமுன்னேற்றங்கள் என்ன? 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டால் ஏற்படப் போகும் தடங்கல்கள் எவை? என்பதை தேசியமாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி விளக்கவேண்டும் என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.]
tags; ஜிதேந்திர சிங், பாஜக, bjp, demands, reduction, of jak, assembly-term, years
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.