உலகின் மிகஉயரமான சிலையாக வல்லபாய் படேலின் சிலை அமைய வேண்டும் என்பதற்கான சிறு முயற்சி இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய்படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு பா.ஜ.க “ஒற்றுமையைநோக்கி ஒடுவோம்” என்ற மாரத்தான் ஓட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.
இப்பேரணியை வடோதராவில் மோடியும், அகமதாபாத்தில் எல்கே.அத்வானியும், டெல்லியில் கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங்கும் தொடங்கி வைத்தனர்.
அப்போது ஓருலட்சம் பேர் திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில்பேசிய மோடி, உலகின் மிகஉயரமான சிலையாக வல்லபாய் படேலின் சிலை அமைய வேண்டும் என்பதற்கான சிறுமுயற்சியாக இந்நிகழ்ச்சி நடக்கிறது . இதை அரசியல் கண்ணோட்டத்துடன் யாரும் அணுக வேண்டாம் இச்செயல் தேச ஒற்றுமைக்கும், தேசநலனுக்காகவும் நடத்தப்படுகிறது என்றார்.
அத்வானி அகமதாபாத்தில் உரையாற்றிய போது “இந்திய அரசு சர்தார் வல்ல பாய் படேலின் பிறந்தநாளிலோ, இறந்தநாளிலோ ஒருபோதும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில்லை”, அவரின் இறந்த நாளன்று நடக்கும் இந்நிகழ்ச்சி தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவாதாக அவர் கூறினார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.