முன்னாள் முதல்–மந்திரியும் கர்நாடக ஜனதாகட்சி தலைவருமான எடியூரப்பாவை பா.ஜ.க தலைவர்கள் நேற்று நேரில்சந்தித்து கட்சியில் சேர முறைப்படி அழைப்புவிடுத்தனர். அழைப்பை எடியூரப்பா ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பா.ஜ.க.,வுடன் கர்நாடக ஜனதா கட்சியை இணைக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
பா.ஜ.க.,வில் இருந்து முன்னாள் முதல்மந்திரி எடியூரப்பா விலகியதை தொடர்ந்து பாஜக கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, அவரை மீண்டும் கட்சியில்சேர்க்க வேண்டும் என்று தலைவர்கள் பலர் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர். இதை தீவிரமாக பரிசீலித்து எடியூரப்பாவை மீண்டும் பா.ஜ.க.,வில் சேர்க்கவேண்டியதன் அவசியம் குறித்து மேலிட தலைவர்களுக்கு மாநில தலைவர்களும் எடுத்துக்கூறினார்கள். இதைத்தொடர்ந்து, எடியூரப்பாவை மீண்டும் கட்சியில்சேர்க்க மேலிடமும் பச்சைக்கொடி காட்டியது.
இதைத்தொடர்ந்து, எடியூரப்பாவை பா.ஜ.க.,வில் மீண்டும்சேர்ப்பது தொடர்பாக அவரை முறைப்படி சந்தித்து அழைப்புவிடுப்பது என்று கட்சி தலைவர்கள் முடிவுசெய்தனர். நேற்று நடந்த கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எடியூரப்பாவை பா.ஜ.க தலைவர்கள் ஜெகதீஷ்ஷெட்டர், அனந்தகுமார் எம்.பி., பிரகலாத் ஜோஷி, ஈசுவரப்பா ஆகியோர் நேரில்சந்தித்து பேசினார்கள். எடியூரப்பா தரப்பில் முன்னாள் மந்திரிகள் ஷோபா, சிஎம்.உதாசி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பா.ஜ.க.,வில் எடியூரப்பா மீண்டும்சேருவதற்கும், கர்நாடக ஜனதா கட்சியை பா.ஜனதாவில் இணைக்கவும் தலைவர்கள் முறைப்படி அழைப்புவிடுத்தனர். அதற்கு இரு தரப்பினரும் சம்மதமும் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மணிநேர கூட்டத்துக்கு பிறகு வெளியேவந்த எடியூரப்பா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கைகோர்த்து மகிழ்ச்சிதெரிவித்தனர். பின்னர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:–பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆக பா.ஜ.க.,வுடன் கர்நாடக ஜனதா கட்சியை இணைப்பது என்று கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுத்து உள்ளோம். இன்னும் 2, 3 நாட்களில் பா.ஜ.க.,வுடன் கர்நாடக ஜனதா கட்சி அதிகாரப் பூர்வமாக இணைக்கப்படும்.மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தி நரேந்திரமோடியை பிரதமர் ஆக்க அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம். இதற்கு மக்கள் ஆசிர்வாதம் வழங்கவேண்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இதைத்தொடர்ந்து, பா.ஜ.க மாநில தலைவர் பிரகலாத்ஜோஷி கூறியதாவது:– கர்நாடக ஜனதா கட்சியை பா.ஜ.க.,வில் இணைக்க எடியூரப்பா முடிவுசெய்து உள்ளார். இதை மாநில பா.ஜ.க., இதயப் பூர்வமாக வரவேற்கிறது. இப்போதைய பா.ஜ.க மற்றும் எடியூரப்பா கூட்டாக இணைந்து மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற பாடுபடுவோம். கடந்த சட்ட சபை தேர்தலின் போது ஏற்பட்ட தவறுகளை சரி செய்து கொண்டு, நரேந்திரமோடியை பிரதமர் ஆக்க ஒற்றுமையாக உழைப்போம்.”இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.