இதோ வரலாறு

 மன்மோகன் சிங் டெல்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது இந்தக் கால மீடியாவும், எதிர்கட்சிகளும் குறை கூறினாலும் எதிர்கால வரலாறு அம்மாதிரிச் செய்யாது என்றும், இன்று அளிக்கப்படும் கண்டனத் தீர்ப்புகளுக்குப் பதிலாக வரலாறு நல்ல தீர்ப்பை அளிக்கும் என்றும் கூறி இருக்கிறார்.

ஆக இன்று அவர் மீதும், அவருடைய ஆட்சி மீதும் எழுந்துள்ள புகார்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை, வரலாற்றைத் தான் நம்புகிறார்.பிரதமரின் மனத்தைக் குளிர்விப்பது, குடிமகனின் கடமை என்று தீர்மானித்த நாம் நாளைய வரலாற்றை இன்றே எழுதி விடத் தீர்மானித்தோம்.

வரலாறு என்றால் அதைத் தனியாக ஒரே ஒரு நபர் உட்கார்ந்து எழுதி விட முடியாது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் அமர்ந்து விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து தான் எதையும் எழுத முடியும்.அப்படிச் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இன்னும் சில ஆண்டுகள் கழித்து எழுதும் போது அவர்கள் தன் பத்தாண்டு கால பணிகளைப் பாராட்டி எழுதுவார்கள் என்று நம்புகிறார் பிரதமர். ஆகையால் அவர் சார்பாக எதிர்கால வரலாற்று ஆசிரியர்களின் விவாதத்தின் ஒரு முன்னோட்டத்தை இப்போது நாம் பார்ப்போம்.

வரலாற்று ஆசிரியர்கள் குழுவின் தலைவர்: சரி இதுவரை இந்தியப் பிரதமர்கள் பலருடைய பணிகள் பலவற்றை பற்றி குறிப்புகள் எழுதி விட்டோம். வாஜ்பாய்க்கு அடுத்து பிரதமராக வந்தவர் பணி பற்றி இப்போது நாம் கவனிப்போம்.

வரலாற்று குழு உறுப்பினர்களில் ஒருவர்: வாஜ்பாய்க்கு அடுத்து இந்திய பிரதமராக இருந்தவர் யார்?

மற்றொருவர்: இது கூடத் தெரியாமல் இங்கே வந்திருக்கிறீர்கள் ? வாஜ்பாய்க்கு அடுத்து பிரதமராக இருந்தவர்..அதாவது வந்து 2004-ஆம் வருடம் பிரதமராக வந்தவர்……

ஒருவர்: அது தான், யார்?

வேறொருவர்: இது கூடத் தெரியாமல் வரலாறு எழுத வந்து விட்டோம் என்பது வெளியில் தெரிந்தால் வெட்கக் கேடு. அப்போது பிரதமராக இருந்தவர், இந்த இந்த.. இவர் …

வரலாற்று ஆசிரியர்; எவர்?

தலைவர்: அதான்..அவர் தான்..

ஒருவர்: நான் ரெக்காடுகளை பார்த்து விட்டேன்.அவர் பெயர் மன்மோகன் சிங்.2004 முதல் 2014 வரை அவர் பதவியில் இருந்தார்.

தலைவர்: பதவியில் இருந்திருக்கலாம்..பிரதமராக இருந்தாரா?

ஒருவர்: பிரதமர் பட்டியலில் அவர் பெயரும் இருக்கிறது

வேறொருவர்: சரி, அவர் எப்படிப் பட்ட பிரதமராக இருந்தார்? அதைப் பற்றி..

தலைவர்:ஒரு விஷயம். நாம் அரசாங்கப் பொறுப்பில் வரலாற்றை எழுதுகிறோம்.அதனால் பத்திரிக்கைகள் மாதிரி கண்டனம் எல்லாம் செய்யக் கூடாது. இப்போது சொலுங்கள் அவர்  எப்படிப் பட்ட பிரதமராக இருந்தார்?

ஒருவர்: 2ஜி ஊழல் என்பது..

வேறொருவர்: அதை பற்றி எழுதினால், அது ஒன்று தான் அப்போதைய ஊழல் என்றாகி விடும். அவர் காலத்தில் நிலக்கரி ஊழல் ஆதர்ஷ் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல்..

தலைவர்: இங்கே என்ன ..விசாரணை கமிசனா நடத்துகிறோம்?வரலாறு எழுதுகிறோம்..இந்த மாதிரி எல்லாம் எழுதினால் வரலாற்றைப் படிக்கிற அயல் நாட்டவர்கள் நம்ம நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள் ?அந்த…அவர் பெயர் என்ன?..அந்த…

ஒருவர்: மன மோகனா..

தலைவர்: கரெக்ட்.மன்மோகன் சிங்.எப்படிப்பட்ட பிரதமராக இருந்தார்?அவர் பிரதமராக இருந்த போது நாடு அடைந்த முன்னேற்றம் என்ன?

மற்றொருவர்: (மௌனம்) ….(நிசப்தம்)..

தலைவர்: என்ன..யாரும் எதுவும் சொல்லாமல் இருந்தால் எப்படி? நல்லதா சொல்ல எதுவுமே இல்லையா?

ஒருவர்: போட்டோகிராப் பாத்தேன்..அவர் கட்டி இருந்த நீல கலர் டர்பன் நல்ல நீளமா இருந்தது …

தலைவர்: நீல கலர் டர்பன் நீலமா இல்லாம, சிவப்பாகவா இருக்கும்? வேறே?

மற்றொருவர்: அவர மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார்..

தலைவர்: சரி..இதெல்லாம் சரிப்பட்டு வராது…சரி..அவரவர் கருத்தாக எழுதிக் கொடுங்கள்..பொதுக் கருத்தாக எழுதி விடுவோம்..(அனைத்து வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளை படிக்கிறார்..) என்ன இது? இவ்வளவு ஒற்றுமையாக எழுதி இருக்கிறீர்கள் பலே..! இதையே மன்மோகன் சிங் வரலாறாக எழுதி விடுவோம்..!

உரக்கப் படிக்கிறார்…மன்மோகன் சிங் என்பவர் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதம மந்திரி பதவியில் அமர்ந்திருந்தார்..

(வரலாறு முடிந்தது) சுபம்..மங்களம்..!

நன்றி ; துக்ளக்

நன்றி தமிழ் எழுத்தாக்கம் பாலமுருகன்

மன்மோகன் சிங் வரலாறு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...