பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க உறுதியாக இணையும் என தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு செவ்வாயன்று பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க, இந்திய ஜனநாயகக்கட்சி ஆகியன இணைந்துள்ளன. இந்த அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைவது உறுதி.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசுவதற்காக முன்னாள் மாநிலத்தலைவர் கே.என். லட்சுமணன், மாநிலப் பொதுச்செயலாளர் சரவணப்பெருமாள், மாநில துணைத் தலைவர் சக்கர வர்த்தி ஆகியோரைக் கொண்ட மூவர்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக்கழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர். ம.தி.மு.க.,வுடன் வியாழக்கிழமை (ஜன. 23) பேச்சு நடைபெறும். கொங்குநாடு முன்னேறக் கழகமும் பா.ஜ.க கூட்டணியில் இணைய விருப்பம்தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 8-ஆம்தேதி வண்டலூர் உயிரியல்பூங்கா அருகில் உள்ள வி.ஜி.பி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசுகிறார். அதற்குள் கூட்டணி முடிவானால் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அதில் பங்கேற்பார்கள். பல்வேறு பத்திரிகைகள் நடத்திய கருத்துக்கணிப்பில் மோடியை பிரதமராக்க தமிழக மக்கள் முடிவு செய்திருப்பது தெரியவருகிறது.
எனவே, பாஜக இடம்பெறும் அணியே முதல் இடத்தைப்பெறும் அணியாக இருக்கும்.
தில்லி முதல்வர்பணியை செய்யாமல் போராட்டம் என்ற பெயரில் அரசியல் ஆதாயம்தேட முயன்றுள்ளார் அரவிந்த் கேஜரிவால். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தனது அரசு டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் என அவர் விரும்புகிறார்.
அதன்மூலம் அரசை நடத்தவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று பிரசாரம்செய்து தேர்தல் ஆதாயம் அடைய அவர் நாடகம் நடத்திவருகிறார். காங்கிரஸ் தூண்டுதலால் தான் ஆம் ஆத்மி என்ற கட்சியே தொடங்கப்பட்டது. ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் மீது அக்கட்சியினர் கூறியகுற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.
இலங்கையில் ராஜபட்ச அரசு இருக்கும்வரை தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. வரும் 27-ஆம் தேதி இருநாட்டு மீனவர்களுக்கும் பேச்சு நடக்க இருக்கும் நிலையில் நேற்று (ஜன. 20) தமிழக மீனவர்கள் 28பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, நடக்க இருக்கும் பேச்சு வார்த்தையால் மீனவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.