காங்கிரஸ் கட்சியில் பிரதமராக்க முயலும் ராகுல்காந்தியின் பொருளாதார திறமை பற்றி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துகூறுவாரா என்று மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவரும், பாஜக மூத்தத் தலைவருமான அருண்ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அருண்ஜெட்லி விடுத்துள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் இல்லை யென்றாலும், சிறந்த அரசியல் தலைவர்களாக இருந்ததுடன், பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தலைமைப்பண்பும், முடிவெடுக்கும் திறனும் கொண்டிருந்தனர்.
அவர்களால் பொருளாதாரப் பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியா விட்டால், தங்களது எண்ணத்தை உறுதிசெய்து விமர்சகர்களை ஒதுக்கி தள்ளுவார்கள். இந்த தன்மையால் தான் அவர்கள் இருவரும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
நரேந்திரமோடி தன்னை பொருளாதார வல்லுநர் என்று கூறிக்கொள்வதில்லை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்தை நிர்வகிப்பதில் தனது திறமையையும் முடிவெடுக்கும் தன்மையையும் நிலை நாட்டியுள்ளார். அதனால் தான் இன்று குஜராத், இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக உள்ளது.
அவருக்கு சிதம்பரம் போன்றவர் களின் சான்றிதழ் தேவையில்லை. சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் வெளியேறி மாற்றம் ஏற்பட்டபின்னரே இந்தியாவில் முதலீடுகள் பெருகும் என்பது தான் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் பிரதமராக்க முயலும் ராகுல்காந்தியின் பொருளாதார அறிவு மற்றும் திறமைபற்றி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துகூறுவாரா?” என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.