நிதின் கத்காரி கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்

 தன்னை ஊழல்வாதிகள் பட்டியலில் சேர்த்து அறிவித்ததைக் கண்டித்து பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவதூறுவழக்கு தொடரப்படும் என்றும் கத்காரி அதில் எச்சரித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசியகூட்டத்தில் நேற்று கெஜ்ரிவால் ஒரு ஊழல் வாதிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் கத்காரி, ராகுல்காந்தி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவர்களை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம், இவர்களை தோற்கடிப்போம் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தற்போது அவருக்கு எதிராக வக்கீல்நோட்டீஸ்கள் பாய தொடங்கியுள்ளன. பா.ஜ.க முன்னாள் தலைவர் நிதின்கத்காரி ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கெஜ்ரிவால் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் சட்டரீதியான வழக்கை சந்திக்கவேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அதில் கூறப்பட்டுள்ளதாவது… 3 நாட்களுக்குள் கெஜ்ரிவால் தனது பட்டியலை திரும்பப்பெற வேண்டும். நீங்கள் தெரிவித்துள்ள கருத்து எனது கட்சிக்காரருக்கு பெரும் அவ மரியாதையையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே நீங்கள்வெளியிட்டுள்ள இந்தியாவின் மாபெரும் ஊழல் தலைவர்கள் என்ற பட்டியலிலிலிருந்து எனது கட்சிக்காரரின் பெயரை நீக்கவேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும். இல்லாவிட்டால், சட்டப்படி உங்கள் மீது அவதூறுவழக்கு தொடரப்படும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களேபொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மஹா கும்பமேளாவில் பங்கேற்கும் ...

மஹா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி மஹா கும்பமேளாவை முன்னிட்டு, பிப்.,5 அன்று பிரயாக்ராஜ் நகரில் ...

டில்லி யமுனையில் குளிக்க தயாரா? ...

டில்லி யமுனையில் குளிக்க தயாரா? கெஜ்ரிவாலுக்கு யோகி ஆதிதித்யநாத் சவால் டில்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.