நரேந்திர மோடியை பிரதமராக்க தில்லியில் 7 மக்களவை தொகுதியிலும் வெல்வதே இலக்கு. காங்கிரஸ் கட்சி ஊழல் தொடர்புடைய கட்சி. ஆம் ஆத்மி அராஜகக் கட்சி. இவ்விரு கட்சிகளால் பாஜகவுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தில்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
புதிய பொறுப்பை வியாழக் கிழமை ஏற்றுக் கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் கட்சி திட்டமிட வேண்டும் என்று எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர்களிடம் கூறிவருகிறோம். இதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்தல்பிரசாரத்தை தில்லி பாஜக.,வினர் ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு எதிராக வீடுவீடாக சென்று பிரசாரம் செய்துவருகிறோம். 49 நாள் ஆட்சியின்போது ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. அக்கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து நிதிபெருகுவதும் மக்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேயின் மீது வழக்குத்தொடராமல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஆம் ஆத்மியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
இதுபோன்று பல்வேறு விவகாரங்களில் ஆம் ஆத்மி இரட்டை நிலையை கொண்டுள்ளது. இதன்மூலம் தில்லி மக்களிடம் பொய்சொல்லி, அவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். காங்கிரஸ் கட்சி ஊழல் தொடர்புடைய கட்சி. ஆம் ஆத்மி அராஜகக் கட்சி. இவ்விரு கட்சிகளால் பாஜகவுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றார்.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.