எம்.பி, எம்எல்ஏ.க்களுக்கு வழக்குகளை தாமதப் படுத்த உரிமை இல்லை

 ஊழல் மற்றும் இதர கடுமையான குற்றவழக்குகளை சந்தித்துவரும் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களுக்கு அதன் விசாரணையை தாமதப் படுத்த உரிமை இல்லை என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை வரவேற்று செவ்வாய் கிழமை அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது

குற்றம் பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் விசாரணையை நீதிமன்றங்கள் முடிக்கவேண்டும் என்று இது குறித்த ஒருவழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதை வரவேற்றுள்ள அருண் ஜேட்லி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: வழக்கு விசாரணையை தாமதப் படுத்தி இழுத்தடிக்க எம்பி மற்றும் எம்எல்ஏ.,க்களுக்கு உரிமை இல்லை.

இந்திய அரசியலில் கிரிமினல் மயம் என்பது, மிகமோசமான பிரச்சனையாக தொடர்ந்துவருகிறது. கிரிமினல் குற்றங்களுக்காக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள பலரை அரசியல் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துகின்றன.

சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் தேர்தலில் நிற்க தகுதி இழக்கிறார்களே தவிர, குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட அரசியல் வாதிகளுக்கு எந்த தடைகளும் இல்லை. இது மக்கள்மனதில் அரசியலின் தன்மையைப் பற்றிய மோசமான எண்ணத்தை உருவாக்குகிறது. சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவிர, ஒருவர் குற்றமற்றவராக கருதப்படுகிறார். இது நீதியின் தேவைக்கும், மக்கள் எண்ணத்துக்கும் ஒரு இடைவெளியை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...