'இந்தியாவின் சீனப் போர்' புத்தக ஆசிரியரும். இந்திய ராணுவவியூக விமர்சகருமான நெவில் மாக்ஸ்வெல் (Neville Maxwell) அவர்கள் ஹெண்டெர்சன் ப்ரூக்குடைய அறிக்கையின் பல பகுதிகளை வெளியிட்டுள்ளார். 1962 சீனப்போரில் இந்திய ராணுவ நடவடிக்கையில் நடந்த பாதுகாப்பு குறைபாடுகளை, அதிகாரிகளான, லெப்.ஜெனரல் TB ஹெண்டெர்சன் மற்றும் பிரிகேடியர் பகத் ஆகிய இருவரும் சேர்ந்து தயாரித்தது அந்த அறிக்கை.
கடந்த 52 ஆண்டுகாலமும் இந்த அறிக்கை வெளிவராமல் பாதுகாத்து வைக்கப்பட்ட ரகசியமாகவே இருந்துவிட்டது. இத்தனை காலமும் எந்த அரசும் இந்த ஆவணத்தை மக்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்ற அவசியத்தைப்பற்றி யோசிக்கவே இல்லை. ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்களின் மீதான அரசின் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த கேள்வி தற்போது எழுகிறது. இப்படி காலவரையற்று ஆவணங்களை மக்களின் ஆழமிக்க பார்வையிலிருந்து விலக்கிவைக்கத்தான் வேண்டுமா? அது உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்தமான ஆவணமாக இருந்தால் பொதுநோக்கம் காரணமாக சிலகாலம் மட்டும் ரகசியமாக வைக்கலாம். அதேசமயம், ஆவணங்களை 'அதிரகசிய'மாக காலவரையற்று வைப்பது பொதுநோக்கமாக நிச்சயம் இருக்காது. எந்த தேசத்திற்கும் தன் பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் உரிமை உள்ளது. ஆவணத்தின் பாதுகாப்பு குறித்த நம்பகத்தன்மை, மிகவும் காலம் தாழ்ந்துவிட்டால் எதிர்காலத்தில் அதன் நமபகத்தன்மையை இழந்துவிடும். எந்த சமூகத்திற்கும் தன் பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் அதை திருத்திக்கொள்ளவும் உரிமை உள்ளது. சில பத்தாண்டுகளுக்கு முன்பாகவே அந்த அறிக்கை மக்களின் பார்வைக்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான் அறிவுக்கண் கொண்டு பார்த்து நான் கூறும் கருத்து.
அறிக்கையின் பகுதி-1 பொதுப்பார்வைக்கு வந்திருப்பதுதான் என்ன? முதல் 111 பக்கங்கள் பொதுப்பார்வைக்கு வந்துள்ளது. அதிலும் ஊடகங்களின் செய்திப்படி பக்கம் 112 லிருந்து 167 ஆம் பக்கம் வரை அறிக்கையில் காணப்படவில்லை. காரணம் அந்தப்பக்கங்களில் 1962 ஆட்சியாளர்களுக்கு தர்மசங்கடப்படுத்தும் விஷயங்கள் குறிப்பாக ஏதாவது இருப்பதாலோ என்னவோ? இப்போது மீதமுள்ள பக்கங்களும் வெளியிடப்பட வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில் நம்பத்தன்மையற்ற யூகங்கள் வெளிவந்து அதையே மக்கள் நம்பும்படி ஆகிவிடும்.
அப்போதைய அரசின் ராணுவ வியூகங்கள் குறித்து அந்த அறிக்கையின் உள்ளடக்கம் கவலையூடடும் கேள்விகளை கேட்கிறது. சீன மனோபாவம் குறித்த உளவுத்துறை மதிப்பீடுகள் பிழையானவை என்றும், ராணுவம் உருவாக்கிய 'முன்னோக்கிய நிலைகள்' வியூகமே, சீன படையெடுப்புக்கு முன்னுரை எழுதிவிட்டது என்றும் அறிக்கை விமர்சிக்கிறது. அன்றைய பிரதமரும் ராணுவ மற்றும் உளவு அமைப்பின் அதிகாரிகள் கொண்ட அவருக்கு பிடித்தமான குழுவும் மதிப்பிடுவதில் பிழை செய்துவிட்டனர் என்றும் அந்த அறிக்கையின் மூலம் தெரிகிறது. சொல்லப்போனால் பிரதமருக்கு நெருக்கமான இந்த அதிகாரிகளால் தேசம் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிட்டது. ஆயுதமேந்திய படையினரின் தயாரின்மை குறித்து அறிக்கையின் பெரும்பாலான இடங்களில் எழுதப்பட்டுள்ளது. 1962ன் ஹிமாலயத்தவறு உண்மையில் நேருவின் தவறுதானே?
கசிந்த அறிக்கையின் பக்கங்கள் நமக்கு நல்ல படிப்பினையை தருகிறது. நம் ராணுவ வியூகம் எந்த அளவில் தயாராக உள்ளது? பூர்வாங்க ஆதாரத்தின்படி ராணுவம் தனக்கு வேண்டிய தளவாடங்களை கேட்டு பெறுவதில் மிகவும் சிரமப்படுகிறது. உலகதரம் வாய்ந்த நம் படையினரிடையே இது மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும்.1962 போர் மூலம் நாம் பாடம் கற்க தயாரா?
நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.