பொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வெடிகுண்டுதாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்

 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய அரசியல் தலைவர்களின் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வெடிகுண்டுதாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உபி உளவுத்துறை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலின் போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஆகியோரை கடத்திச்செல்ல இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்தது.

அதைத்தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதி களை டெல்லி போலீஸார் அடுத்தடுத்து கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேசிய தலைவர்களை தாக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக டெல்லி, உ.பி., பிஹார் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச உளவுப்பிரிவு போலீஸார் புதிதாக ஓர் அதிர்ச்சி தகவலை இப்போது வெளியிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிகதொகுதிகளை கைப்பற்றும் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடும் என்பதால் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அந்தமாநிலத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் பாஜக பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இவர்களில் தேசியத் தலைவர்களான நரேந்திரமோடி (வாரணாசி), ராஜ்நாத்சிங் (லக்னோ), ராகுல் காந்தி (அமேதி), சோனியா காந்தி (ரே பரேலி) என்று உத்தரப் பிரதேசத்தில் நேரடியாக களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் தங்களது தொகுதிகள் உள்பட மாநிலம் முழுவதும் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் ரிமோட்கன்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானங்கள், ஹெலிகாப்டர்களை பயன் படுத்தி வெடி குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில உளவுப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மாநிலத்தின் அனைத்து மாவட்ட போலீஸாரும் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.

முக்கிய நகரங்களில் பொம்மை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விற்பனைசெய்யும் கடைகளில் போலீஸார் தீவிரசோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சிலநாட்களில் யார் யாரெல்லாம் ரிமோட்கன்ட்ரோல் பொம்மைகளை வாங்கிச் சென்றார்கள் என்பது குறித்து கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பொம்மை விமானங்கள்தவிர ‘ஏர் பலூன்கள்’ மூலமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுப்பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...