ஏழைகளிடமே இறைவனை காண்கிறோம்

 தேர்தல்நேரத்தில் மட்டுமே காங்கிரஸ்க்கு ஏழைகள் நினைவு வருகிறது. பாஜக ஏழைகளுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளது ஏழைகளிடமே இறைவனை காண்கிறோம். என்று நரேந்திரமோடி கூறியுள்ளார் .

பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஒடிசா மாநிலத்தின் பாலேஸ்வர் மாவட்டத்தில் தேர்தல்பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் சிலமக்களின் வறுமை சுற்றுலா போன்று ஆகிவிட்டது.

“ஒருபகுதியில் மக்கள் தாஜ்மகால், பத்திரி நாத் மற்றும் கேதர் நாத் செல்கின்றனர். மறுபுறம் மக்கள் வறுமையை பார்க்க குக்கிராமங்களுக்கு செல்கின்றனர். அவர்கள் தனியாகசெல்வது இல்லை, அவர்களுடன் மீடியாக்களும் செல்கிறது. உடனே அங்கு உணவு சாப்பிடுகின்றனர். நன்றாக போஸ்கொடுத்து ஒரு போட்டாவும் எடுத்து கொள்கிறார்கள்”.

“எப்போது தேர்தல் வருகிறதோ, அப்போதுதான் காங்கிரஸ் கட்சி ஏழைகள் குறித்து பேசுகிறது. இது தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மட்டுமே தவிர வேறு ஒன்றுமில்லை” ஆனால் பாஜக ஏழைகளுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளது ஏழைகளிடமே இறைவனை காண்கிறோம். ஒடிசா மாநிலம் புதியவரலாற்றை படைக்க உள்ளது. ” மாற்றத்திற்கான அலை இங்கு வீசுவதை என்னால் காணமுடிகிறது. தற்போது நடைபெறும் அரசு நிலைக்காது” மாநிலத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்களுக்கும், மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்களுக்கும் பிரியா விடை கொடுக்கும் தேர்தலாக இது இருக்கும் .

மக்களுக்கான வளங்களை அவர்கள் அழித்தனர். டெல்லி அரசு நிலக்கரி மற்றும் வேலைவாய்ப்புகளை திருடியது . “உங்களுடைய முதல்மந்திரி (நவின் பாட்நாயக்) உங்களை சந்தித்து பேசினாரா? என்று மோடி கேள்வி எழுப்பினார். மேலும், மத்தியில் நிலையான ஆட்சி அமைக்க பாஜக.,வுக்கு வாக்களிக்க பொதுமக்களை நோக்கி கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...