பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக இன்று மாலை சென்னை வருகிறார். மீனம்பாக்கம் ஜெயின்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
மோடி பேசுவதற்காக மேடை அமைக்கப்படும் பணியை பாஜக மூத்த தலைவரும், தென் சென்னை தொகுதி வேட்பாளருமான இல.கணேசன் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
48 மணி நேரகால அவகாசத்துக்குள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம்பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அளவுக்கு இருக்கைவசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தென்சென்னை வேட்பாளரான நான், மத்தியசென்னை தேமுதிக. வேட்பாளர் ரவிந்திரன், வடசென்னை தேமுதிக. வேட்பாளர் சவுந்தரபாண்டியன், திருவள்ளூர் தேமுதிக– வேட்பாளர் யுவராஜ், ஸ்ரீபேரும்புதூர் மதிமுக. வேட்பாளர் மாசிலா மணி, காஞ்சீபுரம் மதிமுக. வேட் பாளர் மல்லை சத்யா, ஆரணி பாமக. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் பாமக. வேட்பாளர் வேலு ஆகிய 9 பேரும் பங்கேற்கிறார்கள்.
ஆலந்தூர் சட்டமன்ற தேமுதிக. வேட்பாளர் காமராஜும் கலந்துகொள்கிறார். இவர்களுக்கு ஆதரவுகேட்டு மோடி பேசுகிறார். கூட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட கூட்டணிகட்சிகளின் முக்கிய பேச்சாளர்களும் கலந்துகொணடு பேசுகிறார்கள்.
மாலை 5 மணி அளவில் சென்னைவரும் மோடி, ரஜினிகாந்தை சந்தித்து பேசுகிறார். நீண்டநாட்களாக நான் பாரதீய ஜனதாவில் இருந்துவருகிறேன். வாஜ்பாய், அத்வானி ஆகிய மூத்த தலைவர்களும் ரஜினி காந்தை சந்தித்து இருக்கிறார்கள்.
ஒரு முறை அத்வானி, ரஜினி இல்லத்துக்கு நேரில்சென்று சந்தித்தார். அந்த வகையில் எங்களோடு நெருங்கிய நட்புடன் இருக்கும் ரஜினியை மோடி சந்திப்பது ஆச்சரியமல்ல. பா.ஜ.க.,வுக்கு அவர் 'வாய்ஸ்' கொடுப்பாரா? என்று கேட்கிறீர்கள். அதனை பொறுத்திருந்து பாருங்கள்.என்று இல.கணேசன் கூறினார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.