பாஜவை ஏமாற்றிய நிதீஷ்குமார் வருங்காலத்தில் வருத்தப்படுவார்

 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 17ஆண்டு காலம் இருந்துவிட்டு வெளியேறிய பிகார் முதல்வர் நிதீஷ்குமார் வருங்காலத்தில் வருத்தப்படுவார். கூட்டணி கட்சிகளுக்கு பாஜக எப்போதும் மரியாதை அளித்துவருகிறது. ஆனால், நிதீஷ்குமார் பாஜவை ஏமாற்றியது மட்டுமின்றி குற்றம்சாட்டியும் வருகிறார் என்று அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

பிகார் மாநிலத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற பா.ஜ.க பிரசார கூட்டங்களில் அத்வானி பேசியதாவது: ஊழல்கள் நடைபெறுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அனுமதித்திருக்க கூடாது. அதற்கு துணைபோன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.

காங்கிரஸ் தலைமையின் மோசடிக்கு மன்மோகன்சிங் துணைபோனது, அவரது பலவீனத்தை காண்பிக்கிறது. பிரதமர்பதவிக்கு உண்டான பெருமையை அவர் சீர்குலைத்து விட்டார்.

ஐ.மு.,கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, ஊழல்கள், முறைகேடுகள் ஆகியவற்றால் காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வராது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், நதிநீர் இணைப்புத் திட்டம், நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தார். ஆனால், ஐமு.,கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பிரதமர் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டம் சரியான மேலாண்மை இல்லாத காரணத்தால் தோல்வி அடைந்துவிட்டது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். நிதீஷ் வருத்தப்படுவார்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 17ஆண்டு காலம் இருந்துவிட்டு வெளியேறிய பிகார் முதல்வர் நிதீஷ்குமார் வருங்காலத்தில் வருத்தப்படுவார். கூட்டணி கட்சிகளுக்கு பாஜக எப்போதும் மரியாதை அளித்துவருகிறது. ஆனால், நிதீஷ்குமார் பாஜவை ஏமாற்றியது மட்டுமின்றி குற்றம்சாட்டியும் வருகிறார் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...