ராகுல் சின்ன பையனாகத்தான் இன்னும் இருக்கிறார் என்பதை, அவரின் பிரசார வார்த்தைகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். பலூன், மிட்டாய் போன்ற வார்த்தைகளையே அவர் அதிகமாக பயன் படுத்துகிறார்,” என்று பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட மோடி பேசியதாவது:
லோக் சபா தேர்தல் பிரசாரத்தில், நான், பாஜக., தலைவர்கள் ராஜ்நாத், முரளிமனோகர் ஜோஷி, சுஷ்மா போன்றோர், பலமுக்கியமான அம்சங்களை முன்வைத்து, பிரசாரம் செய்துவருகிறோம். ஆட்சிக்கு வந்தால், நாங்கள் என்ன செய்வோம்; ஆட்சியிலிருக்கும் அரசு என்ன செய்ய வில்லை என்பதை நாங்கள் பட்டியலிட்டு வருகிறோம்.
ஆனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, ராகுல் செய்துவரும் பிரசாரத்தை நான் பார்க்கிறேன். சிறு குழந்தைகள் பயன் படுத்தும் வார்த்தைகளான, பலூன், மிட்டாய் போன்றவற்றையே திரும்பத்திரும்ப அவர் பயன்படுத்தி வருகிறார்.பலூன், மிட்டாய் போன்றவற்றை வைத்து விளையாடும் வயதில்லை எனக்கு. நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். எனக்கு , பலூன், மிட்டாய் போன்றவை கிடைக்கவில்லை. மிட்டாய்களுக்காக நான் ஏங்கியதில்லை; போட்டிகளில் வெற்றிபெற்று கோப்பைகளை கைவசப்படுத்தவே முயன்றேன்.
எனவே, வாக்காளர்களான நீங்கள்தான், முடிவு செய்யவேண்டும். பலூன், மிட்டாய்விற்கும் பையன் வேண்டுமா… நிலையான, வலுவான அரசு தர தயாராக உள்ள, பாஜக., வேண்டுமா என்பதை, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.கடந்த சில நாட்களாக, என் தேர்தல் பிரசாரங்களில், பிரதமர் மன்மோகன் சிங்கை மிகவும் அதிகமாக வசைபாடி விட்டேன். அதை தவறு என இப்போது உணர்கிறேன். மன்மோகனின் பத்திரிகை ஆலோசகராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள, சஞ்சயா பாரூ எழுதி உள்ள புத்தகத்தை படித்துப்பார்த்த பின், ‘நடைபெற்ற முறைகேடுகள், குறைபாடுகள் அனைத்திற்கும் அவர் காரணமில்லை; காங்கிரஸ் மூத்தகுடும்பமும், சோனியாவும், ராகுலும்தான் காரணம்’ என்பதை அறிந்து கொண்டேன்.
அதன் பின் எனக்கு, மன்மோகன்சிங் மீது எந்த கோபமும், வருத்தமும் இல்லை. பிரச்னைகளுக்கு எல்லாம், சோனியா, ராகுல்தான் காரணம். சில நேரங்களில், மகள் பிரியங்காவும், மருமகன் ராபர்ட்வாத்ராவும் தான் காரணம் என்பதை அறிந்து கொண்டேன்.உண்மையை இப்படிபோட்டு உடைத்துவிட்டாரே என, மன்மோகன்சிங் மகள் உபிந்தருக்கு கோபம் வந்துள்ளது. அதனால்தான் அவர், சஞ்சயா பாரூவை சாடியுள்ளார்.நம் நாட்டின் விவசாயிகளின் இழிந்த நிலை, வீரர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசுதான் காரணம். இந்ததேர்தல், இளைஞர்களின் தேர்தல்; நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் இளைஞர்களின் தேர்தல்.என்று மோடி பேசினார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.