திரை மறைவிலிருந்து மத்திய அரசை நடத்திய அம்மாவும் மகனும் அதற்கான விலைகொடுக்க வேண்டிவரும்

 ஐ.மு.,கூட்டணியை திரை மறைவிலிருந்து இயக்கிய அம்மாவும் மகனும் அதற்கான விலைகொடுக்க வேண்டிவரும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் .

அஸ்ஸாமில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கூட்டணி அரசில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது சோனியாகாந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும்தான். பிரதமர் மன்மோகன் சிங் பெயரளவுக்குத்தான் என தொடர்ந்து கூறிவந்தோம். இதை உண்மையென நிரூபித்து விட்டது பிரதமரின் ஊடகப் பிரிவு ஆலோசகர் சஞ்சயபாரு எழுதியுள்ள புத்தகம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உண்மையான பிரதமராக யார்செயல்பட்டது என்பதை இந்தபுத்தகம் ஐயமற தெரிவித்திருக்கிறது. இதற்காக அம்மாவும் மகனும் விலை கொடுத்தாகவேண்டும். இன்றைய முக்கியசெய்தியாக எனக்குப் பட்டது பிரதமர்பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒருசெய்தி.

தனது 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் 1100 உரைகளை நிகழ்த்தியிருக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. எனவே அவரைமவுனி என சொல்வதில் நியாயம் ஏதும் இல்லை.

பிரதமர் எத்தனை உரை கொடுத்துள்ளார் என்பதை விட அவர் நாட்டுமக்களுக்கும் ஏழைகளுக்கும் என்ன நன்மை செய்துள்ளார் என்பது பற்றி பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும். அசாமில் உள்ள ஆதிவாசிகளுக்கும் பழங்குடிகளுக்கும் என்ன நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன என்பதை எப்போதுமே பிரதமர் அலுவலகம் வெளியிட்டதில்லை. இதற்குகாரணம் அவர்கள் உங்களை நினைவில் வைப்பதில்லை. தேர்தல் வரும்போதுதான் உங்கள் மீது கவனம் வருகிறது. எனவே இப்போது நீங்கள் அவர்களை மறக்கவேண்டும்.

தேர்தல் வந்தால்மட்டும் ஓட்டு கேட்கவரும் அம்மாவும் மகனும் அரசை திரைக்கு பின்னாலிருந்து இயக்குகிறார்கள். எனவே நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால் முதலில் அந்த அம்மா, மகனிடமிருந்து நீங்கள் முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அசாமை காப்பாற்றவேண்டும் என்றால் முதல்வர் தருண்கோகோய், அவரது மகன் கவுரவிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

காங்கிரஸ்கட்சி வாக்குவங்கி அரசியலில் இறங்கியுள்ளது. அசாமில் உள்ள வங்க தேசத்தவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மக்களின் நலனில் காங்கிரஸுக்கு எந்த வித அக்கறையும் இல்லை. எனக்கு வாக்களித்தால் நாட்டின் எதிர்காலத்தை மாற்றி உங்கள் வாழ்வில் மாற்றம் கொண்டுவருவேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...