தனது தொகுதியான அமேதியையே கையாளமுடியாத ராகுல் காந்தியால் நாட்டை வழிநடத்த முடியுமா என நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தீஷ்கார் மாநிலம், சர்குஜாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது.
”அமேதி மக்களிடம் சோனியா காந்தி, தனது மகனைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் (ராகுல்காந்தி) நாட்டை கவனித்துக்கொள்வார் என நமக்கு சொல்லப்படுகிறது. இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா, சொல்லுங்கள். தனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு தொகுதி மக்களை கெஞ்சிக்கேட்கிறார்… ராகுலால் தனது அமேதியை கையாள முடியாதபோது, அவரால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
‘மக்களின் கனவுகளை விற்றுக்கொண்டிருக்கிறார், நாட்டின் நிலையை ஒரே நாளில் மாற்றிவிடும் மந்திரக் கோல் வைத்திருக்கிறார்’ என காங்கிரஸ் தன்னை விமர்சித்து வருகிற நிலையில், குறுகியகாலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட்வதேரா மட்டும் பெரும் பணக்காரராகி விட்டது எப்படி என்று மோடி கேள்வி எழுப்பினார்.
இது பற்றி அவர் குறிப்பிடுகையில், ”பத்தாம் வகுப்பு பாஸ்செய்த அந்த இளைஞர் பாக்கெட்டில் ஒருலட்சம் ரூபாய் வைத்திருந்தார். ஆனால் மூன்றே வருடங்களில் பாக்கெட்டில் ரூ.300 கோடி வந்துவிட்டதே? இது தாய்மகன் மாடல். நீங்கள் 2ஜி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது ஜிஜாஜி (மச்சான்) பற்றி கேள்விப்படுகிறீர்கள். இவர்கள் கைகளிலா நாம் நாட்டை விடமுடியும்?”
பிரதமர் 10 ஆண்டுகளில் 1,100 முறை பேசி இருக்கிறார் என்பதை தெரியப்படுத்துவதற்காக முதன் முதலாக பிரதமர் அலுவலகம் பத்திரிகை யாளர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறது. பிரதமர் 10 வருடங்களில் 1,100 முறை பேசியது தான் அவரது சாதனை”
”அரசாங்கத்தை நடத்தியது மன்மோகன்சிங் அல்ல. தாயும், மகனும் தான் அரசாங்கத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். அரசாங்கத்தில் நடந்த எல்லாதவறான செயல்களுக்கும் மன்மோகன் சிங் விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் உண்மையான அதிகாரம் சோனியா, ராகுல் வசம்தான் இருந்திருக்கிறது என்பதை பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரியின் புத்தகம் இப்போது படம் பிடித்துக்காட்டி இருக்கிறது” என கூறினார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.