வாரணாசி உள்ளிட்ட 41 தொகுதிகளில் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

 நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 41 தொகுதிகளில், 9வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

வாரணாசி உள்பட உத்தர பிரதேசத்தில் 18, மேற்கு வங்கத்தில் 17, பீகாரில் 6 என மொத்தம் 41 தொகுதிகளில் 9-வது மற்றும் கடைசிகட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அந்ததொகுதிகளில் நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம், நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

41 தொகுதிகளிலும் மொத்தம் 606 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததால் தொகுதியை அல்லாதவர்கள் தொகுதியைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வெளியேறினார்கள். தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

வாரணாசி தொகுதியில்மட்டும் 20 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த 41 தொகுதிகளுக்கும் இன்றிரவு முதல் நாளை முழுவதும் பூத் சிலிப்கொடுக்கும் பணி நடைபெறும். 12-ந்தேதி காலை 7 மணி முதல் 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 6மணிக்கு மேல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூடி சீல்வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் 9 கட்டங்களாக நடைபெற்றதேர்தலின் முடிவுகள் மே 16ம்தேதி அறிவிக்கப்படும். அன்றுகாலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மதியத்துக்குள் பெரும்பாலான தொகுதிகளுக்கான வெற்றி நிலவரம் தெரியவரும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...