லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது.இந்த தேர்தல்பிரச்சாரத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, 3 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம்செய்து. பேரணி மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திய கூட்டம் உட்பட 5827 பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியுள்ளார் என்று பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மோடி, கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல், இந்தியாவின் தேர்தல்வரலாற்றில் அதிக பட்சமாக வெளி களபணியை அதாவது 25 மாநிலங்களில் 437 பொது கூட்டங்கள் 1350 3D பேரணி உள்ளிட்டவைகளில் மோடி பங்கேற்றுள்ளார் என்று பாஜக தெரிவித்துள்ளது.
4 ஆயிரம் “சாய் பெ சர்ச்சா” என்னும் மக்களோடு கலந் துரையாடும் நிகழ்ச்சிகள் உட்பட மொத்தம் 5,827 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும், அவர் போட்டியிடும் இரண்டுதொகுதிகளான வாரணாசி மற்றும் வதோரா தொகுதிகளில் இரண்டு மெகாபேரணிகளிலும் பங்கேற்றுள்ளார் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மோடி நாடு முழுவதும் உள்ள சுமார் 5-10 கோடி மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் . கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் ஹரியானாவில் தேதி தனது பிரச்சாரத்தைதொடங்கிய மோடி, மே 10ம் தேதி உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியான பாலியாவில் தனது பிரச்சார பயணத்தை முடித்துள்ளார் என்று பாஜக தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே 21 மாநிலங்களில் 38 பேரணியில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். தேர்தல் வரலாற்றிலேயே மோடிபேரணி மிகப் பெரிய மக்கள் திரளும் கூட்டமாக இருந்திருக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.