பாஜக நாடாளுமன்றகுழு கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி, நிதின் கட்காரி உள்ளிட்டோர் புதன் கிழமை டெல்லியில் இருந்து குஜராத் சென்றனர். அவர்கள் காந்தி நகரில் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது; 17ம் தேதி பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக மோடியை எப்பொழுது தேர்வுசெய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும். பா.ஜ.க.,வுக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தே.ஜ.,கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளன. நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.