இந்தவெற்றி, என்னுடைய வெற்றி அல்ல. லட்சக் கணக்கான தொண்டர்களின் வெற்றிதான். பாஜகவின் இந்த வெற்றிக்காக கட்சித்தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். அவர்களது உழைப்புக்குக் கிடைத்த பரிசே இந்த வெற்றி. இந்த வெற்றி இந்திய மக்களின் வெற்றி என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைதேர்தல் வெற்றிக்குப் பின்னர் முதல் முறையாக தலைநகர் டெல்லிவந்த நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மோடி வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்துள்ள நிலையில், அமைச்சரையில் இடம்பெறப்போகும் தலைவர்கள் குறித்த முக்கிய ஆலோசனை இன்று நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் பதவியை ஏற்கவுள்ள நரேந்திரமோடி, கட்சியின் தேசிய தலைவர் ராஜ் நாத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நரேந்திரமோடி டெல்லி புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்திலிருந்து அசோகா சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு மோடி செல்லும்வழி எங்கும் பாஜக தொண்டர்கள் திரண்டனர். நகரெங்கும், மோடியை வரவேற்க மக்கள் திரளாக வந்தடைந்தனர்.
அவர் செல்லும் வழிகளில் ஆயிரக் கணக்கான மக்கள் கூடி இருந்து மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து அசோகாசாலை வரை மேள தாளங்களுடன், மோடிகோஷ மழையுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது காரிலிருந்து வெளியே மக்களை நோக்கி மக்களுக்கு நன்றிதெரிவித்த மோடி, பாஜக அலுவலகம் செல்லும் முன் மக்களிடையே பேசினார். அப்போது அவர்,” இந்தவெற்றி, என்னுடைய வெற்றி அல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் வெற்றி தான். பாஜகவின் இந்த வெற்றிக்காக கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். அவர்களது உழைப்புக்குக் கிடைத்தபரிசே இந்த வெற்றி. இந்த வெற்றி இந்திய மக்களின்வெற்றி” என்றார்.
நரேந்திர மோடியுடன் இந்த ஊர்வலத்தில் ராஜ்நாத்சிங், ரவிசங்கர் பிரசாத், நிதின் கட்கரி உள்ளிட்டோர் இருந்தனர். பேரணி பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் மற்றும் டெல்லி போலீசார் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.