சரித்திர நிகழ்வு!

 நேற்றைய தலையங்கத்தில், "16ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள், ஒரு நிலையான ஆட்சிக்கு வழிகோலுமானால், கடந்த கால் நூற்றாண்டு கால அரசியல் நிலையின்மைக்கு அது முற்றுப்புள்ளி வைக்க உதவும். இந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள்' என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். தேர்தல் முடிவுகள் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறது.

1984க்குப் பிறகு, முப்பதாண்டு இடைவெளிக்குப் பின்னால், தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதே மிகப் பெரிய ஆறுதல். 16ஆவது மக்களவை மேலும் பல புதிய சரித்திரங்களைப் படைக்க இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த தலைமுறையின் தலைமையில் அமைய இருக்கும் முதல் மத்திய அரசு இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முன்னால் பதவி வகித்த பிரதமர்கள் அனைவருமே அடிமை இந்தியாவில் பிரிவினைக்கு முன்பு பிறந்தவர்கள். 1950இல் பிறந்த நரேந்திர மோடி பிரதமராவதன் மூலம், தலைமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

அதேபோல, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்கப் போவதும்கூட ஒருவிதத்தில் சரித்திர நிகழ்வுதான். 1977இல் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது என்றாலும், அது கட்சிகளின் கூட்டணியாகக் காட்சி அளித்ததே தவிர, ஒரு கட்சியாக இயங்கவில்லை. கேரள மாநிலத்தையும், ஒரு சில வடகிழக்கு மாநிலங்களையும் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது என்பதும் முதல் முறை நிகழ்வு.

இந்தியாவின் பல பகுதிகளில் மோடி அலை அடித்தது என்றால், கேரளம், தமிழகம், ஒடிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நரேந்திர மோடியின் தாக்கம் காணப்பட்டது என்பதுதான் உண்மை. 50 நிமிடமே பிரசாரம் செய்த வதோதராவில், இந்தியத் தேர்தல் வரலாற்றில் சரித்திரம் படைக்கும் 5,70,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட வாராணசியில் மெளனப் புரட்சியாக வெற்றி. நரேந்திர மோடி மீது மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இவை வெளிச்சம் போடுகின்றன.

நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, என்னென்ன விமர்சனங்கள், எத்தனை எத்தனை எதிர்ப்புகள். அவை அனைத்தையும் பொய்யாக்கி, இந்தியா முழுவதும் புயல்போலச் சுற்றி அலைந்து, பா.ஜ.கவுக்கு சாதகமான பேரலையை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருக்கும் நரேந்திர மோடியைப் பாராட்டியே தீரவேண்டும். சுதந்திர இந்திய சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு மாநில முதல்வரால் தேசியத் தலைவராக, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏகோபித்த ஆதரவைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் மோடி.

2002 குஜராத் கலவரத்தை நரேந்திர மோடியுடன் இணைத்து, அவர்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டார் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியவர்கள் முகத்தில் கரி பூசியிருக்கிறார்கள் வாக்காளர்கள். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு உள்ளிட்ட அனைத்து விசாரணைகளும் குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்குத் தொடர்பில்லை என்று உறுதிப்படுத்தியும்கூட, அவரை "மரண வியாபாரி' என்று வர்ணித்து, சிறுபான்மை இனத்தவர் மத்தியில் பீதியை எழுப்பிய போலி மதச்சார்பின்மைவாதிகளின் பிரசாரத்தை மக்கள் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது.

நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என்பது போன்ற தவறான தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 17% மக்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் நம்பிக்கையால் இஸ்லாம் மதத்தினரே தவிர, பிறப்பாலும் உணர்வாலும் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்பதை நன்றாகவே உணர்ந்தவர் நரேந்திர மோடி. அவர் பிரதமரானால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்பது அரசியல் ஆதாயம் தேட சிலர் எழுப்பும் அனாவசிய பீதியல்லாமல் வேறொன்றுமில்லை.

அரசமைப்புச் சட்டம்தான் எனது புனித நூல் என்று நரேந்திர மோடி நமக்களித்த சிறப்புப் பேட்டியில் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையிலும், அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான பிரதமராக தான் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது போலி மதச்சார்பின்மை வாதிகளின் பொய்ப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வலிமையான, ஊழலில்லாத இந்தியா உருவாகட்டும். இளைஞர்களின் இந்தியா வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடட்டும். ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக தான் இருப்பதை உணர்ந்து, "சப்கா சாத், சப்கா விகாஸ்!'(அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக!) என்கிற கோஷத்துடன் ஆட்சியில் அமர இருக்கும் நரேந்திர மோடிக்கு நமது வாழ்த்துகள்!

நன்றி ; தினமணி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...