நம்புவோம் நமோவை

 இது எதிர்ப்பதற்கான நேரமன்று| , நரேந்திர மோடி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது அவருக்கு காட்டும் சலுகையன்று , தமிழ் மக்கள் மீதான ஈவு இறக்கமற்ற அவரது செய்கைகளுக்கான அங்கிகாரமும்மன்று , என்றைக்கு நரேந்திர மோடி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தாரோ அன்றே ராஜபக்சேக்களுக்கு செக் வைக்கப்பட்டு விட்டது.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மே 26-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தெற்கு ஆசிய கூட்டமைப்பை சேர்ந்த சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது. சார்க் அமைப்பில் பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.மேலும் இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சார்க் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் புதிதாக பதவி ஏற்க்கவுள்ள நரேந்திர மோடி அரசு தனது அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை மேற்கொள்ள விரும்புவதாக சமிக்சை காட்டியுள்ளது. அதாவது அறிவிக்கப்படாத சார்க் மாநாட்டை கூட்டியுள்ளது. சார்க் கூட்டமைப்பில் இலங்கையும் வருவதால் இலங்கை அரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்திருப்பதால் அவர்களின் தமிழர்களுக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளையும் அங்கீகரித்து விட்டதாக அர்த்தம் ஆகாது. இதை ராஜபக்சேவே அறிவார்.

1999 ம் ஆண்டு இலங்கை போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை அரசு சற்று நிதானமாகவே போரிட்டது, காரணம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நேரம் அது. எங்கே மத்தியில் பாஜக அரசு வந்துவிடுமோ என்ற பயமே அவர்களை நிதானம் கொள்ளச்செய்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது என்ற செய்தி வந்த பிறகே இலங்கை அரசு அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இலட்ச கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. பாஜக மற்றும் காங்கிரஸ் அரசின் மீதான இலங்கையின் பார்வை இதுதான்.

தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றதற்கு வாஜ்பாய் அரசு காட்டிய ராஜதந்திர எதிர்ப்பை கண்டு மிரண்டு போன இலங்கை அரசு பின்னர் தமிழக மீனவர்களை கைது செய்யவே அஞ்சியது.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதி நடவடிக்கைகளில் இலங்கை தமிழர்களுக்கு துப்பாக்கி தோட்டாக்களின் சத்தங்களோ, பெரும் குண்டுகளின் சத்தங்களோ, போர் விமானங்களின் இரைச்சல்களோ அற்ற அமைதி வாழ்க்கை கிடைத்தது. இதுவே இலங்கை விவகாரத்தில் பாஜக.,வுக்கும் காங்கிரசுக்கும் உள்ள பெரும் வித்தியாசம்.

தன்னை மூர்க்க தனமாக எதிர்ப்பவர்களை கூட தன்வசப்படுத்தி நண்பர்களாக ஆக்கிக்கொள்வதில் மோடி வல்லவர். எதிரிகளை மேலும் எதிர்த்து அவர்களை வலியவர்கலாக ஆக்குவதைவிட , அவர்களை அரவணைத்து நண்பர்களாக ஆக்குவதன் மூலம் அவர்களை வலுவிழக்கவும் செய்யலாம். நாமும் மேலும் மேலும் வலிமை பெறலாம். நமோ மந்திரமும் இதுவே.

தன்னை குஜராத்தில் கடுமையாக எதிர்த்து போட்டியிட்ட கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சியை தேர்தலில் படுதோல்வி அடைய செய்த மோடி , வெற்றி பெற்ற பின்னர் முதலில் கேசுபாய் பட்டேலிடமே ஆசிப்பெற்று, அரவணைத்து அவரது அன்பையும் பெற்றார் , கால மாற்றத்தில் குஜராத் பரிவர்த்தன் கட்சி பாஜக.,வுடன் இணைந்தது.

தன்னை குஜராத்தில் எதிர்த்த காங்கிரஸ் கட்சியை 26 தொகுதிகளிலும் வெற்றிக்கொண்டு ஜனநாயக வழியில் இருக்கும் இடம் தெரியாமல் ஒலித்ததோடு மட்டும் அல்லாமல், ராமர் கோவில் காட்டுங்கள், பொது சிவில் சட்டம் கொண்டு வாருங்கள் என்று குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுக்கும் அளவிற்கு அவர்களை மனதளவில் மாற்றிக் காட்டியவர் மோடி.

பிரதமர் பதவியின் மீதான ஆசையில் மோடியை கடுமையாக எதிர்த்தவர் நிதிஷ் குமார். பாஜக.,வின் கூட்டணிக்குள் இருந்து கொண்டே மோடியை பீகாருக்குள் வரக்கூடாது என்று அவரை அவமானப் படுத்தியவர். மோடி பிரதமர் வேட்ப்பாளராக அறிவிக்க பட்டவுடன் பாஜக.,வுடனான தனது 17 வருட நடப்பை உதறித் தள்ளியவர். ஆனால் அவரது அதிக பிரசங்கி தனமான நடவடிக்கைகளை பீகார் மக்களே ஆதரிக்கவில்லை, எனவேதான் அவருக்கு இரண்டு தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி வாய்ப்பை தரவில்லை. பிரதமர் பதவிமேல் கண்வைத்து முதல்வர் பதவியை இழந்ததுதான் மிச்சம்.

ஒரு மாநில முதல்வராக இருந்துகொண்டே கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இந்திய அரசியலில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திய மோடி இன்று பாரத பிரதமர். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மட்டும் அவரது முக்கிய இலக்கு அல்ல. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி வல்லரசாக உருவாவதே அவரது முக்கிய இலக்கு.

அதன் முதல் படியாகத்தான் அவர் சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் இலங்கையும் இருப்பதால் அந்த நாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இராஜபக்சே என்ற தனி மனிதருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. ராஜபக்சே இலங்கை மக்களின் பிரதிநிதி. மக்களின் மனதில் மற்றம் வந்தால் அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை மாற்றிவிடுவார்கள். இன்று ராஜபக்சே நாளை ரணில்விக்கிரம சிங்கவை மக்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம்.

மற்ற நாடுகளை அழைத்து விட்டு ராஜபக்சேவை மட்டும் புறக்கணித்திருந்தால் அவர் சிங்களர் மத்தியில் அனுதாபத்தை தேடியிருப்பார். இராஜபக்சேக்களும் , இலங்கை ஊடகங்களும் இந்தியாவுக்கு எதிரான எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்க தொடங்குவர் . இது இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும், இந்தியாவின் எதிர்கால இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மட்டுமே முடியும்.

இராஜபக்சேவுக்கு காங்கிரஸ் வழங்கியதோ அளவுக்கு அதிகமான சலுகை. மோடி வழங்குவதோ ஒரே ஒரு வாய்ப்பு. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை தாமரையை மலரச்செய்த மோடியால் . இலங்கை தமிழரின் வாழ்வில் மகிழ்ச்சியை மலரச்செய்ய முடியாத எண்ண?. நம்புவோம் நமோவை.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...