இந்தியாவுக்கு பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்குவோம்

 இந்தியாவுக்கு பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையில் உறுதியளித்துள்ளார்.

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி இன்று மாலை பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்றபின், பிரதமர் அலுவலக இணையதளம் வழியாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துசெய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது , கடந்த 16ம் தேதி இந்தியமக்கள் தங்களுடைய தீர்ப்பை அளித்துள்ளனர், நாட்டின் வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் மற்றும் ஸ்திரத் தன்மைக்காக அவர்கள் வாக்களித்துள்ளனர். நாடு இது வரை காணாத புதிய உச்சத்தை அடைவதற்கான பயணத்திற்கு எங்களை அர்ப்பணித்துள்ளோம். அதற்காக நாட்டுமக்களின் ஆதரவு, ஆசீர்வாதம் மற்றும் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். ஒன்றிணைந்து நாட்டிற்கு பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்குவோம். வலிமையான, வளர்ச்சியுடைய மற்றும் ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்கும் நமது கனவை நனவாக்க ஒன்று படுவோம்.

பிரதமர் அலுவலக இணைய தளம், பிரதமருக்கும், நாட்டு மக்களுக்கும் இடையேயான மிகமுக்கியமான ஊடகம். தொழில்நுட்பத்தின் சக்தி மற்றும் சமுதாய ஊடகங்களின் சக்தியில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த இணையதளம் வழியாக, எனது உரைகள், பணிதிட்டங்கள், வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், மத்திய அரசின்சார்பில் துவங்கப்படும் திட்டங்கள் குறித்தும் இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். என்று மோடி தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...