மாநிலங்களின் முன்னேற்றத்தில் தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கி உள்ளது

 மாநிலங்களின் முன்னேற்றத்தில் தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கி உள்ளது மாநிலங்கள் எழுப்பக்கூடிய பிரச்சினைகளுக்கு முன் உரிமை வழங்கவேண்டும் , என பிரதமர் நரேந்திரமோடி தனது அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி கடந்த 26ம் தேதி பதவி ஏற்றார். பிரதமர் அலுவலகத்தில் அவர் நேற்றுமுன்தினம் (27ந் தேதி) பொறுப்பேற்றார்.

நேற்று அவர் பிரதமர் அலுவலக அதிகாரிகளைக்கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:–

பிரதமர் நரேந்திரமோடி இன்று (நேற்று) தனது அலுவலக அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தினார். அப்போது அதிகாரிகள், பிரதமர் அலுவலகத்தின் கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.

இந்த கூட்டத்தின் போது பிரதமர், பொதுமக்களின் குறைகளை துரிதகதியில் நிவர்த்திசெய்ய வேண்டியதின் அவசியத்தை தனது அலுவலக அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும், வலுவானவகையில் கண்காணிக்க ஏற்றவிதத்தில் அமைப்பு முறையினை, செயல் முறைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த பலபத்தாண்டுகளில் பிரதமர் அலுவலகம், ஒருமுக்கிய அமைப்பாக உருவாகி இருக்கிறது. அதன் சிறப்பான செயல் முறைகள் முன்னோக்கி பீடுநடைபோட வேண்டும் என பிரதமர் கூறினார்.

மாநிலங்கள் எழுப்பக்கூடிய பிரச்சினைகளை தமது அலுவலகம் பரிசீலிப்பதில் அதிக உணர் திறனுடன், முன் உரிமையுடனும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என விரும்புவதாகவும் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

மாநிலங்களின் முன்னேற்றத்தில் தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கி உள்ளது என்பதால் இது முக்கியம் வாய்ந்தது எனவும், இதுதான் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும் எனவும் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

மக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது பாராளுமன்ற நடை முறைகளின் மூலமோ வைக்கிற பிரச்சினைகளை கவனிக்கவேண்டியதின் முக்கியத்துவம் குறித்தும் தனது அலுவலக அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார்.

நல்லநிர்வாகம் நடப்பதற்கு அனைவரும் குழுவாக இணைந்து செயல் படுவது அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டினார். அதிகாரிகள் எப்போதும் தங்களது யோசனைகளுடன் தன்னை தாராளமாக சந்தித்துபேசலாம் எனவும் கூறி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...