பிரதமரின் பதவி ஏற்புவிழாவுக்கு ‘சார்க்’ நாடுகளின் தலைவர்களை அழைத்ததன் மூலம் உலகுக்கு இந்தியா ஒருசேதியை வெளியிட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
பிரதமராக பதவியேற்றபிறகு டெல்லியில் உள்ள பாஜக. அலுவலகத்துக்கு நேற்று மாலை முதல் முறையாக சென்றமோடி, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் எனது அரசிடம் நிறைய எதிர்ப் பார்க்கின்றனர். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது எனது அரசின்கடமை.
நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதன்விளைவாக, இந்தியாவுக்கான மரியாதையையும் அந்தஸ்தையும் உலகம் அளிக்கும். எனது பதவியேற்பு விழாவுக்கு சார்க்நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.
இதன் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒருதகவலை அளித்தோம். இது எப்படி நடந்தது என்று உலகநாடுகள் அதுகுறித்து இன்னமும் பேசிவருகின்றன. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒருசரியான முடிவு எவ்வளவு திறன் வாய்ந்ததாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி காரணமாக மக்கள் நீண்டகாலமாக அதிருப்தி அடைந்திருந்தனர். மாற்று அணி அனுபவமும் உரிய பயனளிக்கவில்லை.இந்நிலையில், மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கூடுதல்பொறுப்பு எனது அரசுக்கு இருக்கிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களிடையே அலையும், பொதுவான சிந்தனையும் இருந்திருக்கா விட்டால் பாஜகவுக்கு மக்களவையில் இந்த அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருக்காது என்று மோடி பேசினார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.