ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஆர்எஸ்எஸ். நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆர்எஸ்எஸ். அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் இரண்டு நாள்கூட்டம், ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் சனிக் கிழமை (ஜூன் 14) தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய பொறுப்பாளர்கள், தென்னிந்திய அமைப்பாளர்கள் என 300-க்கும் அதிகமான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காலையிலிருந்து நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாக மாலையில் தேவிப்பட்டினம் நவபாஷன நவக்கிரக கோயிலில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், இங்கு கூட்டம் கூடக்கூடாது, கலைந்து செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். அதனை ஏற்று நவக்கிரக கோயிலில் இருந்து கலைந்துசென்று கொண்டிருந்தவர்களை வழிமறித்து எவ்வித காரணமும் கூறாமல் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுமிகவும் கண்டிக்கத்தக்கது.
ஆர்எஸ்எஸ். ஒரு பொதுநல அமைப்பாகும். நாட்டின் எந்த பகுதியிலும் இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு எந்தத்தடையும் இல்லாதபோது, தேவிப்பட்டினத்தில் எந்தக் காரணமும் இன்றி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தமிழக காவல் துறையினர் கவனம்செலுத்த வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.