மத்தியில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது.
16வது லோக்சபாவின் முதல்பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. ஆகஸ்ட் 14ம் தேதிவரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் ஜூலை 8ம் தேதி(நாளை) ரயில்வே பட்ஜெட்டும், ஜூலை 10ம்தேதி பொதுபட்ஜெட்டும் தாக்கல்செய்யப்பட உள்ளது. மொத்தம் 168 மணிநேரம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் 28 அமர்வுகளை கொண்டது எனவும், பல்வேறு அமைச்சகங்களின் கோரிக்கைகள் குறித்து ஜூலை 31ம் தேதி இரு அவைகளிலும் விவாதிக்கப்படும் எனவும் லோக்சபா சபாநாயகர் சுமித்ராமகாஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவிவகாரம் குறித்தும் முழுமையான விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவை உறுப்பினர்கள் பேசுவதை அவையின் அனைத்து மூலைகளிலும் அமர்ந்துள்ள உறுப்பினர்களும் பார்ப்பதற்குவசதியாக, அவர்களின் பேச்சு பெரியதிரையில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.