கங்கை நதியை நாசமாக்கும் 48 தொழிற்ச் சாலைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நீர்வள மற்றும் கங்கை தூய்மைபடுத்துதல் திட்டத்துக்கான இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் எழுத்துப்பூர்வமாக அளித்திருந்தார். அதில்,கங்கை மற்றும் அதன் துணைநதிகளின் அருகே இருக்கின்ற 764 தொழிற்சாலைகள் தினமும் 501 மில்லியன் லிட்டர் கழிவுநீரை வெளியேற்றி வருவதாக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இவற்றில் 704 தொழிற்சாலைகளில் தேசிய கங்கை நதிவடிகால் ஆணைய (என்ஜிஆர்பிஏ) அதிகாரிகளால் கடந்த மே மாதம் முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் 165 தொழிற் சாலைகளுக்கு விளக்கம்கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுடன், அதில் 48 தொழிற்சாலைகளை விரைவில் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.