விரைவில் வருகிறது மோடியின் 17 அம்சதிட்டம்

 இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி வகுத்துள்ள 17 அம்சதிட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற 100வது நாளில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற பின்னர், இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரிதரயில், பேருந்து பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக 17 அம்சங்கள்கொண்ட திட்டம் ஒன்றை வகுத்தார். இந்த திட்டம் கடந்த 10ம் தேதி இறுதிசெய்யப்பட்டு மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதன்மீதான விரிவான செயல்திட்டத்தையும், அவற்றை அமல்படுத்துவது தொடர்பான கருத்துகளையும் ஜூலை 20ம் தேதிக்குள் உருவாக்கி தருமாறும் அந்த அமைச்சகங்கள் கண்டிப்புடன் கேட்டு கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற 100வது நாள் செப்டம்பர் மாதம்முதல் வாரத்தில் வருகிறது. அப்போது இந்த 17 அம்ச திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் தங்களது முனையில் இருந்து நாட்டில் தாங்கள் செல்லவிரும்பும் எந்த பகுதியையும் 24 மணி நேரத்திற்குள் சென்றடையும் விதமாக சாலை மற்றும் ரயில் வழி போக்குவரத்தை மேம்படுத்துவது. இதற்காக கிழக்கு மற்றும் மேற்கு கடலோர விரைவுவழிகளை அமைப்பது. மேலும் இந்த விரைவு வழிகளை ஒருங்கிணைப்பது.

மத்திய பிரதேசமாநிலம் கான்ஹாவில் இருந்து ஆந்திரமாநிலம் கிருஷ்ணா வரையிலான இடை வழிபாதையை உருவாக்குவது. இந்தபாதையில் சாலை போக்குவரத்து, ரயில்கள் ஒருங்கிணைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை அமைப்பது போன்றவை நிறைவேற்றப்படும்.

நகரங்களில் பயணிகள் விரைவான மற்றும் குறைந்த கட்டணத்தில் பயணம்செய்வதற்கு ஏற்ப மெட்ரோரெயில் மற்றும் துரிதபஸ் போக்குவரத்துகளை ஏற்படுத்துவது.

உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்களை மேற்கு மற்றும் கிழக்குகடலோர பகுதிகளில் அமைப்பது. இதன் மூலம் அதிக எடைகொண்ட சரக்கு கப்பல்களை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய கடல் வழித்தடமாக இந்தியாவை உருவாக்குவது.

நாட்டின் அனைத்து குடிமக்களும் பயன் பெறும் வகையில் நீண்ட தூர தொலைபேசி கட்டணங்களை உள்ளூர் கட்டண அளவிற்கு குறைப்பது.

ஊரகப்பகுதிகளில் சிறிய மின்பாதைகளை (கிரிட்) தனியாரும், கூட்டுறவு திட்டத்தின் மூலம் நிறைவேற்றிகொள்ள அதிகாரம் அளிப்பது. கிராமப் புறங்களிலும் இதுபோன்ற சிறிய மின்பாதைகளை அமைப்பதற்கு திட்டமிடுதல்.

தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிகளுக்கு அமர்த்துவதை தவிர்த்து, அவர்கள் நிரந்தரமாக பணியாற்றும்வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது. தொழிற்சாலைகளுக்கான சட்டவிதிகளை சிறுதொழில் நிறுவனங்களிலும் செயல்படுத்துவது.

கறுப்புபணத்தை தடுக்க, பான் கார்டு மற்றும் ஒரேமாதிரியான அடையாள எண்களை அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பயன்படுத்துவதை கட்டாயமாக்கல். இடெண்டர் முறையை பயன்படுத்த அனைத்து அரசுகளையும் கட்டாயப்படுத்துவது.

பொதுமக்கள் நலன்கருதி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு பணியாளர்களின் சொத்துவிவரங்களை வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் சட்டம் கொண்டுவருதல்.

மருத்துவ துறையில் ஆண் பணியாளர்களை கூடுதலாக அனுமதிக்க சீர்திருத்தங்களை கொண்டுவருவது. மாவட்டங்களில் சுகாதார கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவது, இவை மாவட்ட மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வகைசெய்தல். சமூக சுகாதாரத்தில் 3 ஆண்டு பிஎஸ்சி. படிப்பை ஏற்படுத்துவது.

மேற்கண்டவை உள்பட 17 அம்ச திட்டத்தின் லட்சியங்களை நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில், பொதுச்சேவை வினியோக உத்தரவாத அமைப்பு ஒன்றை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...