தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப்படாது. நீதித்துறை நியமன ஆணையமசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் நிருபர்களிடம் ஞாயிற்றுக் கிழமை அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்துக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. மூன்று நாள்களுக்குள் எம்பி.க்கள் தொகுதிக்கு சென்று விட்டு டெல்லி திரும்பமுடியாது என்பதால் விடுமுறை நாள்கள் 4 ஆக அதிகரிக்கப்பட்டது.
தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப்படாது. நீதித்துறை நியமன ஆணையமசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் விவகாரத்தில் அட்டர்னிஜெனரல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அது குறித்து மக்களவை சபாநாயகர் பரிசீலித்து முடிவெடுப்பார். இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்ப தாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது தவறானது.
ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த போது மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் பொறுப்பு யாருக்கும் அளிக்கப்படவில்லை.
மக்களவைத் தலைவர் விவகாரத்தில் 1977முதல் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ்கூறுகிறது. அப்படியென்றால் 1977க்கு பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது மக்களவையில் 31 உறுப்பினர்களுடன் மிகப்பெரிய கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்துக்கு ஏன் எதிர்க் கட்சி அந்தஸ்து அளிக்கப்படவில்லை என்றார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.