நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் அவைகளில் மிகக்கடுமையான, சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தொடரில் கரோனாதடுப்பூசி தட்டுப்பாடு, ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க் கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப் படுகிறது.
17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான இந்த மழைக்கால கூட்டத் தொடா் திங்கள் கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய் தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும்.
கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்கவந்த பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் மழைபெய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே குடைபிடித்தபடி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இருஅவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சியினரும் கடுமையான மற்றும் சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள். ஆனால், அமைதியான முறையில் விவாதம் நடத்த அனுமதிக்கவேண்டும்,
மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டும்.
நாட்டு மக்கள் சார்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது, அனைத்துமுக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கவும் தயாராக உள்ளது. அதேவேளையில் மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |