மத சாதியற்ற யுகம் உருவாகிவிட்டது என்பதையே பாஜக.,வின் உபி வெற்றி காட்டுகிறது

 2014 மக்களவை தேர்தலில், இதுவரை அடைந்திராத வகையில் உ.பி.,யில் 73 தொகுதிகளை (பாஜக71, அப்நாதள்2) வென்று பாஜக, வரலாறு காணாத தன் வெற்றியை பதிவு செய்துள்ளது . கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு ஏதும் இன்றி மக்களவையில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற இதுவே

வலுசேர்த்தது . உ.பி. பாஜக தேர்தல் பொறுப்பாளரான அமித்ஷா அவர்களே கூட தன் பேட்டிகளில் 55 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று தான் எதிர்பார்க்க வில்லை என்று ஒத்துக்கொண்டிருந்தார்.

உ.பி. சமாஜ்வாதி அரசில் அமைச்சராக உள்ள அஸம்கான் தேர்தலுக்குப்பின் நிருபர்களிடம் பேசுகையில், "நரேந்திர மோதியின் மக்களவைத் தேர்தல் வெற்றி, இந்திய முஸ்லிம்கள் எல்லோரும் எப்போதும் மதச்சார்பின்மையாளர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கிறது" என்றார். மேலும் அந்த அமைச்சர் கூறுகையில், பாஜகவின் 'பொய் வாக்குறுதிகளால் முஸ்லிம்கள் கவரப்பட்டனர் என்றும், ஐ.ஜ.கூட்டணி அரசின் தவறான கொள்கைகள்தான் தன் மாநிலத்தின் தேக்கநிலைக்கு காரணம் என்றும் தன் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கும் கட்சித்தலைவர் முலாயம்சிங்கிற்கும் ஆதரவாக பேசினார் .

இப்பேட்டி உண்மைதானா? விடை காண முயற்சிப்போம்:

பதிமூன்றரை கோடி வாக்காளர்கள் உள்ள உ.பி.யில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ விவரம் பின்வருமாறு:

யாதவர்கள்-9.6%
எஸ்ஸிக்கள்-20.1%
முஸ்லிம்கள்-18%
பிராமணர்களும் தாகுர்களும்-7.6%
பிற வகுப்பினர்-10.1%
OBC – இதர பிற்படுத்தப்பட்டவர்கள்-34.7%
(குர்மிக்கள் 7.5%,ஜாட்கள் 3.6%, லோத் 5%, தெலி/சாஹு 4% மீதி மற்றவர்கள்)

2009ல் பதிவான மொத்த வாக்குகளில், பஹுஜன் சமஜ்வாதி கட்சி 27%, சமஜ்வாதி கட்சி 23%, காங்கிரஸ் மற்றும் பாஜக 18% வாக்குகளும் பெற்றிருந்தன. யாதவர்களில் 73% பேர் சமஜ்வாதி கட்சிக்கு வாக்களித்திருந்தனர். முஸ்லிம் வாக்குகள் சிதறியது (சமஜ்வாதி 30%, காங்கிரஸ் 25%, பஹுஜன் 18% மற்றும் பாஜக 6%). பாஜகவை தோற்கடிக்கும் வகையில் முஸ்லிம்கள் தந்திரமாக வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களித்திருந்தனர். உயர் வகுப்பினரின் வாக்குகள் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் பிரிந்து பதிவானது. லோத் வகுப்பின் 32% வாக்குகள் சமஜ்வாதிக்கே போனது. (உபயம் கல்யாண்சிங் – அந்த தேர்தலில் அவர் சமஜ்வாதிக்கு ஆதரவளித்தார்). இது பாஜகவிற்கு பாதிப்பை உண்டாக்கி அந்த வகுப்பினரின் ஆதரவு 24% என சுருங்கிப்போனது. ஆனால் அதே கல்யாண்சிங் ஆதரவால் – பாப்ரி மசூதி இடிக்கப்பட்டபோது முதல்வராயிருந்ததால் – சமாஜ்வாதியின் முஸ்லிம் வாக்குகளும் 2007 சட்டசபை தேர்தலைவிட (-17%) சுருங்கியது. தாழ்த்தப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பகுஜன் சமாஜ் தொடர்ந்து அந்த தேர்தலிலும் பெற்றது.

இந்த 2014 தேர்தலில், 2009 தேர்தலை ஒப்பிடுகையில், பாஜக 25% கூடுதலாகவும், பகுஜன் சமாஜ் 8% இழந்தும், சமாஜ்வாதிக்கு விளிம்புநிலை இழப்பாக 1% மற்றும் காங்கிரஸின் இழப்பு 10% எனவும் பதிவாகியுள்ளது . சமாஜ்வாதியின் வாக்கு சதவீதம் மாறாமல் இருந்ததன் காரணம் அது தன் முஸ்லிம் – யாதவர் வோட்டு வங்கியை தக்கவைத்துக்கொண்டதுதான்.

பாஜகவுக்கு 73 இடங்கள் கிடைத்தது எப்படி? இதைப்பற்றியும் இதன் முக்கிய வாய்ப்புகள் பற்றியும் மிகவும் எழுதப்பட்டுவிட்டது. அதில் முக்கிய வாய்ப்புகளாக கூறப்படுபவை – வகுப்பு பாகுபாடின்றி ஹிந்துக்கள் பலமாக ஓரணியில் திரண்டது, அமித்ஷாவின் வியூகம் மற்றும் உ.பி. விவகாரங்களை அவர் கையாண்ட விதம், வேட்பாளர்கள் தேர்வு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்முயற்சி, பாஜக தொண்டர்களின் ஒற்றுமை ஆகியவை.

வாய்ப்பு I

ஹிந்துக்கள் (யாதவர்கள் மற்றும் எஸ்ஸிக்கள் தவிர்த்து) ஓரணியில் திரண்டதுதான் பாஜக 73 இடங்கள் கைப்பற்றுவதை உறுதி செய்ததா? பிராமணர்கள், தாக்குர்கள், குர்மிக்கள், ஜாட்கள், லோத், தெலி, மற்ற பிற வகுப்பினர் 100% மொத்தமாக பாஜகவிற்கு வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியம்.

இது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனெனில், பகுஜன், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் மேற்கண்ட அதே வகுப்பினரை வேட்பாளர்களாக நிறுத்தினால் வாக்குகள் பிளவுபடும்.

வாய்ப்பு II

பாஜகவுக்கு பெரும்பான்மையான உயர்வகுப்பு / OBC வகுப்பினரும் வாக்களித்து கூடவே முந்தைய தேர்தலைவிட கூடுதலாக எஸ்சி / முஸ்லிம் வகுப்பினரும் வாக்களித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

என் கணக்கீடுகளின்படி, குறைந்தது 25% எஸ்‌சியினரும் (2009 வாக்களிப்பைவிட நான்கு மடங்கு) 20% முஸ்லிம்களும் (2009ஐ விட மும்மடங்கு) பாஜகவுக்கு உ.பியில் வாக்களித்திருக்கின்றனர்.

இந்த மகத்தான வெற்றியில், எதிர்பார்த்த 55க்கும் பெற்ற 73 இடங்களுக்கும் இடையிலான வெற்றிடத்தை நிரப்புவதில் முஸ்லிம்கள் மற்றும் எஸ்‌சிக்களின் பங்கு குறித்து கீழே குறிப்பிட்டுள்ள அம்சங்களில் வாய்ப்பு II குறித்து விரிவாக விவாதிக்கலாம்.

(i) முஸ்லிம்களும் எஸ்‌சிக்களும் மக்கள்தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக 48 / 80 தொகுதிகளில் உள்ளனர் (மொத்த உபி தொகுதிகளில் 60%). பாஜக கூட்டணி இவற்றில் 44 / 48 இடங்களை பெற்றது.

(ii) 9 / 80 இடங்களில் (மேற்க்கண்டவை சேர்த்து) முஸ்லிம்களும் எஸ்‌சிக்களும் மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். ஆச்சரியப்படும் வகையில் இந்த எல்லா இடங்களையும் பாஜக கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றது. அதிலும் குறிப்பாக முசஃபர்நகர் தொகுதியில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில்!

(iii) 10 / 80 இடங்களில் முஸ்லிம்கள் மட்டுமே 30லிருந்து 50% பேர் மக்கள்தொகையில் உள்ளனர். இவற்றிலும் எல்லா இடங்களையும் பாஜக கூட்டணியே கைப்பற்றியது.

முஸ்லிம்கள் / எஸ்சிக்கள் ஆதரவின்றி எப்படி இந்த இடங்களை பாஜக வென்றது? 'எஸ்சிக்கள் மட்டுமே ஆதரவளித்தனர், முஸ்லிம்கள் வாக்கு இல்லை' என சிலர் கூறலாம். அப்படியே பார்த்தாலும் பகுஜன் சமாஜ் 20% வாக்குகளை பெற்றது இப்போதும் அதன் வசம் உள்ள பெரும்பாலான எஸ்‌சி வாக்குகளால்தானே?

எல்லா கட்சிகளிடமிருந்தும் முஸ்லிம் / எஸ்‌சி வாக்குகளை பாஜகவும் ஒரு பங்கை ஸ்வீகரிக்க முடிந்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று. நான்குமுனை போட்டியில் 30% வாக்கு விகிதம் வெற்றிக்கு போதுமானது.

ஏன் சில முஸ்லிம்களும் எஸ்சிக்களும் பாஜகவுக்கு வாக்களித்தனர்?

போலி மதச்சார்பின்மை கட்சிகளாலும் அதன் பொய் வாக்குறுதிகளாலும் முஸ்லிம்களில் சிலர் சோர்ந்து போயிருந்தனர் எனத்தெரிகிறது. குஜராத்தில் முஸ்லிம்களின் அபிவிருத்தி மற்றும் கடந்த பத்தாண்டுகளில் அந்த மாநிலத்தில் நிலவும் அமைதி போன்றவை அவர்களை பாஜகவிற்கு வாக்களிக்க தூண்டியது. தாங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும், தங்கள் குழந்தைகளுக்கும் கல்வி, வேலை கிடைக்க வேண்டும் என விரும்பினர். நிகழ்கால அரசியலால் வெறுத்துப்போயிருந்தனர். முஸ்லிம் இளைஞர்களின் உருவகத்திற்கு நரேந்திர மோதி வடிவம் கொடுத்தார்.

கடந்த ஆண்டின் 4 மாநில – டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் – சட்டசபை தேர்தல்களில் தலித் இளைஞர்கள் பலமாக வாக்களித்திருந்தனர். இந்த நான்கு மாநிலங்களிலும் 67 / 71 தனித்தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கண்டு அதனால் கவரப்பட்ட தலித் இளைஞர்கள் இம்முறை மத்தியில் பாஜக ஆள வாய்ப்பளித்தனர்.

முஸ்லிம்களும் தலித்களும் சந்தேகமின்றி பாஜகவுக்கு வாக்களித் திருத்தார்களேயானால் (மேற்குறிப்பிட்ட மிகவும் ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கங்களைப் போல) மத ஜாதியற்ற யுகம் இந்தியாவில் அமைக்கப்பட்டு விட்டது என்றே இதை அழைக்கலாம். இந்தியாவில் இந்தியர்களாகவே வாழ்வோம்…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...