யு.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வுகாண்பார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதியளித்துள்ளார் .
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணித்தேர்வின் முதல்நிலைத் தேர்வு எழுதும் நடைமுறையில் மாற்றம்வேண்டும் என்று இந்திய அளவில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக பயிற்சிமாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல்நிலை தேர்வுக்கான வினாத் தாள்களும் மாநில மொழியில் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையையும் மாணவர்கள் வைத்துள்ளனர். இந்தப்பிரச்சினை கடந்த சில நாட்களாக, நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இதற்கு பதில் தரும் விதத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது , “பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தில் தீர்வுகாண ஆராய்ந்துவருகிறார். விரைவில் இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும்.
இந்திமொழி மீது முக்கியத்துவம் அளிப்பது என்று இதனை பார்ப்பதை விட, மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதுதான் இதில் சிந்திக்கவேண்டிய விஷயம். இந்த விவகாரத்தில் நடுநிலையான முடிவுதேவை என்பதில் பிரதமர் தெளிவாக உள்ளார். இதற்கு விரைவில் தீர்வுகிடைக்கும்” என்றார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.