பிரதமர் நரேந்திரமோடி, வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காகு வரும்போது நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் அமெரிக்காவுக்கு நரேந்திர மோடி செல்கிறார் , வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்துப்பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோடியை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு அவைகளின் தலைவர்களுக்கு 80-க்கும் மேற்பட்ட அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியிருந்தனர்.
ஆனால், அதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் பிரதிநிதிகள் அவையின் 435 உறுப்பினர் பதவியிடங்களுக்கும். செனட் அவையின் 33 உறுப்பினர் பதவி யிடங்களுக்கும் வரும் நவம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இரு அவைகளின் பெரும்பாலான உறுப்பினர்கள், தேர்தல்பிரச்சாரம் செய்ய தங்களின் தொகுதிக்கு சென்று விடுவார்கள். எனவே, மோடி வருகையின் போது அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தினால், அதில் பெரும்பாலான உறுப்பினர்களால் பங்கேற்க இயலாத ஒரு சூழ்நிலை உருவாகும் என்பதால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மோடி உரை நிகழ்த்த பெரும்பாலும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.