பிரதமர் நரேந்திர மோடிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காகவே, காப்பீட்டு மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தடைபோடுவதாக மத்திய அரசு குற்றம் சுமத்தி யுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியநிதி மற்றும் கம்பெனி விவகார துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்புக் கூட்டத்தொடரிலேயே காப்பீட்டுத் திருத்தமசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக கூறினார். இதற்கு, தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப் பதாகவும், காப்பீட்டு திருத்த சட்டமசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா செல்லும்முன், காப்பீட்டு மசோதாவை நிறைவேற்றி, அவருக்கு நற்பெயர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டாம் என்று காங்கிரஸ் எண்ணுவதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையானது தான் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். காங்கிரஸ் தடையாக இருப்பதற்கான வேறு எந்த காரணத் தையும் தங்களால் அறிய முடியவில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.