சுதந்திரத் திருநாளில் இருந்து, நாகர்கோவில் வானொலி நிலையம் காலை 5..55 முதல் இரவு 11 மணிவரை நாள் முழுதும்செயல்படும் என நாகர்கோவில் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது; 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி முதல் அகில இந்திய வானொலி நிலையம் செயல்படத்துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் திருவனந்த புரத்தின் தென்பகுதி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்பகுதி உள்ளிட்ட 20 இலட்சம் மக்களை உள்ளடக்கிய பகுதிக்கு அகில இந்திய வானொலி நிலையம் தனது சேவையை செய்துவருகிறது.
இதன் ஒலிபரப்பு மாலை 5.30 முதல் இரவு 9.00 மணி வரையில் செயல்பட்டுவந்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 2000-ம் ஆண்டில் மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் அவர் முயற்சியால் இந்த வானொலி நிலையத்தில் ஒலிபரப்பு காலை 5.55 முதல் 9.30 வரையிலும் பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் விரிவுபடுத்தப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிப்படி கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்து வலியுறுத்தியதின் பேரில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையம் காலை 5.55 மணி முதல் இரவு 11.00 மணி வரை இடைவெளியின்றி செயல்படும் என உறுதியளித்துள்ளார்
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.