இந்தியாவுக்கு ஆயுதங்கள் சப்ளைசெய்யும் நாடுகளில், அனைத்து நாடுகளையும் பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளதாக லோக்சபாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயுதங்கள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகையில், 40 சதவீதம் அமெரிக்காவிற்கு சென்றுள்ளது. ரஷ்யாவிற்கு 30 சதவீதமும், பிரான்ஸ் நாட்டிற்கு 14 சதவீதமும், இஸ்ரேல் 4 சதவீத தொகையையும் பெற்றுள்ளது.ஆயுதங்கள் இறக்குமதிக்காக செலவிடப் பட்ட ரூ.83,458 கோடியில், அமெரிக்காவிலிருந்து ரூ.32,615 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவிilலிருந்து ரூ.25, 363 கோடிக்கும், பிரான்சிலிருந்து ரூ.12, 046 கோடிக்கும், இஸ்ரேல் நாட்டிலிருந்து ரூ3,389 கோடிக்கும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கடந்தகாலங்களில், இந்தியாவுக்கான ஆயுதங்கள் ஏற்றுமதியில், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாடுகள் முன்னிலை பெற்றிருந்தன. ஆனால் முந்தைய ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இடையே கடந்த மூன்றாண்டுகளில் ஆயுததங்கள் இறக்குமதிதொடர்பாக மிகப் பெரிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆயுதங்கள் இறக்குமதியில், இந்தியா விமானப்படை தொடர்பாக அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. சி 17 டிரான்ஸ் போர்டர்ஸ் இறக்குமதி செய்ய 4.7 அமெரிக்க பில்லியன் அளவுக்கு ஒப்பந்தமும், பி8 ஐ உளவு விமானம் தொடர்பான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.டி 90 டாங்குகள், சூ 30 எம்கேஐ போர்ப் படை விமானங்கள் மற்றும் சிறிய ஆயுதங்கள் தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து மிராகிபோர் விமானங்கள் இறக்குமதி செய்வது தொடர்பாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.