சரஸ்வதி நதி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
பாஜக உறுப்பினர் ரத்தன்லால் கட்டாரியா மக்களவையில் பேசும்போது, சரஸ்வதி ஆய்வுமையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் உமாபாரதி பேசியதாவது: “சரஸ்வதி ஒன்றும் புராணங்களில் கூறப்படும் கற்பனை நதியல்ல. அந்த நதி இருந்ததற்கான ஆதாரங்கள் இப்போது கிடைக்க தொடங்கியுள்ளன. இந்த நதி தொடர்பாக குஜராத்தில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
பழங் காலத்தில் இமயமலையிலிருந்து வந்த பல நதிகளுக்கு சரஸ்வதி என்றே பெயரிடப்பட்டிருந்தது. அதில் ஒரு நதிதான் அலகாபாத் பகுதியில் திரிவேணி நதியுடன் சங்கமித்துள்ளது. இரண்டாவது மந்தாகினி நதியுடனும், மூன்றாவது அலாக்நந்தா நதியுடனும் இணைந்துள்ளது.
சரஸ்வதி என்ற பெயரில் ஹரியாணாவில் இருந்து ராஜஸ்தான், குஜராத்வழியாக நதியொன்று ஓடியுள்ளது.எனவே, சரஸ்வதி நதியின் மூலத்தை கண்டறியும்படியும், அந்நதி ஓடிவந்த பாதைகள் குறித்த தகவலை சேகரிக்குமாறும் நிலத்தடி நீர் ஆராய்ச்சித் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.