மகாத்மா காந்திஜியின் 150வது பிறந்த நாளுக்குள் தூய்மை இந்தியாவை உருவாக்கவேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நரேந்திர மோடி, தமது சுதந்திரதின உரையில் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் மாநில அரசுகள் ஒத்துழைக்கவேண்டும் என்றும், இது காந்தியின் கனவு என்றும் கூறியுள்ளார். காந்திஜியின் 150 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும்போது இந்தியா தூய்மையானதாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சிலவிஷயங்களை வலியுறுத்தி உள்ளது. அதன் படி நாட்டில் திறந்த வெளிக் கழிப்பிடங்களை பயன் படுத்துவதை முற்றிலுமாக புறக்கணிக்க வழிவகை செய்யவேண்டும்.
இவ்விஷயத்தை செய்வதில் குடிநீர்துறை மற்றும் துப்புரவுத்துறை ஆகிய இரண்டு அமைப்புக்களும் விரைந்து செயல்படவேண்டும். அப்படி சாத்தியமில்லாத பட்சத்தில் இரு அமைப்புகளும் கூட்டாக இணைந்து செயல்படவேண்டும். அப்போதுதான் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நாம் தூய்மையான இந்தியா தினமாக கொண்டாடமுடியும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.