பிற மொழிகளைக் கற்பதைப் போல் சம்ஸ்கிருதம் கற்பதும் தவறல்ல என்று மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை பெரம்பூர் கஸ்தூர்பா நிம்சந்த் ஷா பி.முத்தையாலு செட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 40-ஆம் ஆண்டு விழாவில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
பள்ளிப்பருவத்தில், பெற்றோர்களை விட ஆசிரியர்கள்தான் மாணவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்களோ அதேபோலத்தான் மாணவர்களும் உருவாக்கப்படுகின்றனர். நாட்டை ஆளப்போகும் திறமை படைத்த வர்களாக குழந்தைகளை மாற்றுவதில் ஆசிரியர்களுக்கு அதிகபங்குள்ளது.
தமிழைத் தவிர மற்ற மொழிகள் அனைத்தும் பிழைப்புக்கான மொழிகள்தான். தமிழரோடு பேசும்போது தமிழில் பேசுங்கள், ஆனால், அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
அரசியல் வாதிகள் செய்த தவறால் 1967-ஆம் அண்டுக்குப்பிறகு தமிழகத்தில் ஹிந்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மாணவர்கள் ஹிந்தியை கற்கமுடியாத சூழல் உருவானது. அண்மையில் ஒருவார காலம் சம்ஸ்கிருதவாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. பிற மொழிகளை கற்பதைப்போல் சம்ஸ்கிருதம் கற்பதில் எந்தத்தவறும் கிடையாது. மாணவர்கள், பிற மொழிகளை கற்பதை யாரும் தடை செய்யக்கூடாது என்றார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.