நரேந்திரமோடி ஓர் பிரதமராக செயல்படாமல் இந்திய திருநாட்டின் ஊழியனாக செயல்படுகிறார்

 தமிழக மீனவர்கள் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் மத்தியில் ஆட்சி நடத்துகிற நரேந்திரமோடி ஓர் பிரதமராக செயல்படாமல் இந்திய திருநாட்டின் ஊழியனாக செயல்படுகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்றதொகுதி எம்.பி.யும், மத்திய மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த சில தினங்களாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று அவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்தியில் ஆட்சி நடத்துகிற நரேந்திரமோடி ஓர் பிரதமராக செயல்படாமல் இந்திய திருநாட்டின் ஊழியனாக செயல்படுகிறார். இலங்கைக்கும், தமிழக மீனவர்களுக்கும் நடக்கும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும்விதத்தில் இரு அரசுகளும் பேசி நல்லதோர் முடிவை விரைவில் மோடி அரசு செயல்படுத்தும்.

மத்திய அரசு தமிழக அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் நிதிகள் அனைத்தும் எந்தவிதமான பாகுபாடின்றி தமிழக அரசுக்கு வழங்கப்படும்.

முந்தைய காங்கிரஸ் அரசு பல திட்டங்களை செயல்படுத்துவோம் என வாய்மொழியாக கூறிவிட்டு அனைத்து திட்டங்களையும் கிடப்பில்போட்டது. அதுபோல் அல்லாமல் மோடி அரசு தீட்டுகிற திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் மக்களை சென்றடையும் விதத்தில் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகள் சீர் செய்யப்பட்டு கூடுதலாக நாற்கர சாலைகள் அமைக்கப்பட உள்ளது. எந்த பகுதி மக்களுக்கும் சேதம் எதுவும் நிகழாதபடி விரைவில் சுசீந்திரம் பாலம் சீர்செய்யப்படும இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...