தனது அரசு ஏழைகளுக்கானது என்பதை நூறு நாட்களுக்குள் நிருபித்து விட்டார் மோடி

 தனது அரசு ஏழைகளுக்கானது என்று பேச்சுடன் நிறுத்திக்கொள்ளாமல் , பதவி ஏற்ற நூறு நாட்களுக்குள் அதற்க்கு செயல்வடிவம் தந்துள்ளார் நரேந்திர மோடி. ஏழரை கோடி ஏழை குடும்பங்களை இலக்காக கொண்டு ஒரே நாளில் ஒன்றரை கோடி குடும்பங்களை தேசிய நிதி நீரோட்டத்தில் இனைத்து சாதனையும் படைத்து விட்டார் எங்கள் மோடி.

ஏழைகளின் பெயரைச் சொல்லித்தான் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது. ஆனால் அந்த ஏழைகளுக்கு ரூபாய் 5000, 10000 கடன் கொடுப்பதற்கு கூட ஏகப்பட்ட சட்ட திட்டங்களை பேசி , வங்கியில் கடன் என்பது தங்களுக்கு எட்டாக் கனியே , வங்கிகளில் சலுகை என்பது ஏட்டளவில் மட்டுமே என்ற மனோநிலைக்கு ஏழைகளை தள்ளிவிட்டது இன்றைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்.

அதே நேரத்தில் ரூபாய் 5000, 10000 கோடி கடனை கூட எளிதாக பெற்றுவிடலாம், திருப்பி செலுத்தாட்டி கூட பெரிய பிரச்சனை இல்லை என்ற மனோநிலைக்கு பெரும் செல்வாக்கு பெற்றவர்களையும் , தொழில் அதிபர்களையும் தள்ளியது அதே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தான் . பெரும் தொழில் நிறுவனங்கள் மட்டும் வங்கிகளுக்கு மூன்று லட்சம் கோடிக்கு மேல் திருப்பி செலுத்தாமல் பட்டை நாமம் போட்டுள்ளது.

இதில் கிங்ஃபிஷர் 6,000 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் 2,600 கோடி, எல்க்ட்ரோதெர்ம் 2,211 கோடி, ஜூம் டெவலப்பர்ஸ் 1,810 கோடி, ஸ்டெர்லிங் பயோடெக் 1,732 கோடி, எஸ் குமார்ஸ் 1,692 கோடி, சூர்ய விநாயக் இண்டஸ்ட்ரீஸ் 1,446 கோடி , கோவை டைட்டல் பார்க் ரூ.121.50 கோடி . திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம், ரூ.600 கோடி, சூர்யா குழும நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி என சொல்லிக்கொண்டே போகலாம்.

அதாவது பல கோடி ஏழைகளுக்கு, பாமரனுக்கு கடனாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய பல லட்சம் கோடியை சில நூறு நிறுவனங்களுக்கு கடனாக , வராக்கடனாகவே வழங்கி விடுகின்றன வங்கிகள். இந்நிலை மாறவேண்டும் பாமரனும், படிக்காதவனும் கூட வங்கி நடவடிக்கையில் பங்குபெற வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா' என்ற பெயரில், வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்க வகை செய்யும் புதிய திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி பேருக்கு வங்கி கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அத்தனை பேருக்கும் இலவசமாக வங்கிக்கணக்கு தொடங்கித் தரப்படுவதோடு, "ரூபே' என்ற வங்கிப்பண அட்டையும் (டெபிட்கார்டு) ரூ.30 ஆயிரத்துக்கான காப்பீட்டு வசதியும், ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு வசதியும் அளிக்கப்படுகிறது. 

வங்கி நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்  படுபர்களுக்கு ஆறு மாதம் கழித்து 5000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை திருப்பி ஒழுங்காக செலுத்துபவர்களுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் கூடுதலாகவும் கடன் வழங்க வாய்ப்பு உருவாக்கி தரப்படுகிறது. இதன் மூலம் வங்கியை விட பல மடங்கு வட்டியை வசூலிக்கும் கந்து வட்டிக்காரர்களின் பிடியிலிருந்து சிறு குறு வியாபாரிகளை, விவசாயிகளை மீட்க்க முடியும். ரூ 5000 த்துக்கு தினம் தினம் வட்டியாக மட்டும் ரூ 500 வசூலிக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கு மத்தியில் வங்கி வட்டி மாதமே ரூ 50 தை தாண்டாது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

மேலும் அரசின் அனைத்து மானிய தொகைகளும் அவர் அவர் வங்கி கணக்குகளுக்கு நேரடியாகவே வந்து விடும். எப்படி நாட்டின் 74% மக்கள் கைப்பேசியை எளிதாக கையாள கற்றுக்கொண்டு விட்டார்களோ அதைப்போன்று ஏழைகளுக்கும் அன்றாட வங்கி நடவடிக்கைகள் எளிதாகிவிடும். பெருவாரியான மக்கள்  வங்கி நடவடிக்கைகளில் பங்கு பெறுவார்களேயானால் வங்கி பண பரிமாற்றத்தில் ஏழைகளும் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்தப் பட்ட தொழில் நுட்பம் வந்துவிடும்.

கொத்தனார்களும் , சித்தால்களும் , விவசாய கூலி தொழிலாளர்களும் தங்கள் அன்றாட கூலியை தங்கள் வங்கி கணக்கின் மூலமே பெரும் சூழ்நிலை உருவாகலாம். வடை ,டீ , காபி வாங்கிய காசை கூட தங்கள் கடன் அட்டையின் மூலமே திருப்பி செலுத்தும் ஒரு சூழ்நிலையும் உருவாகலாம். இதன் மூலம் சிறு, குறு வியாபாரத்தில் இது வரை புழங்கி வந்த கணக்குக்கு வராத பல லட்சம் கோடி ரூபாய் அரசின் கண்காணிப்புக்கள் வரும். அரசின் வரி வருவாயும் பலமடங்கு பெருகும்.

எனவே பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா'வில் இலவசமாக தானே கணக்கு தொடங்கி கொடுக்கிறார்கள். 5 000 ம் தானே கடன் தருகிறார்கள். செத்தால் தானே காப்பிட்டு பணம் என்று கருதி விட வேண்டாம். இது வரை பணக்காரர்கள் மட்டுமே பங்குகொண்டு வந்த பொருளாதார நீரோட்டத்தில் ஏழைகளையும் இணைக்க வேண்டும், கடை மடை பகுதி வரை பொருளாதார நிதி நீரோட்டம் எங்கும் பாய்ந்து செழிக்க வேண்டும் என்பதே இதன் முழுமுதற் நோக்கமாகும்.    

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...