அமெரிக்காவில் உள்ள ஐ.நா, பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ‘பாதுகாப்பு’ மற்றும் ‘மேம்பாடு’ தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது உரையை வாசிப்பதற்கு பதிலாக, போர்ச்சுக்கல் நாட்டின் உரையை வாசிக்க தொடங்கினார் .
இதன் காரணமாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள்-மத்தியில் சலசலப்பு உருவானது . உடனே இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி கிருஷ்ணாவிடம் தவறை சுட்டி காட்டினார். தவறை உணர்ந்த கிருஷ்ணாவும், பிறகு தனது உரையை வாசித்தார். மூன்று நிமிடங்கள் இந்த குழப்பம் நீடித்தது.
இது குறித்து எஸ்எம்.கிருஷ்ணா கூறுகையில்; உரையை மாற்றி-வாசித்ததில் தவறு ஒன்றும் கிடையாது ; அது ஒரு பெரிய விஷயமும் இல்லை . நிறைய பேப்பர்கள் என் முன்னால் கிடந்ததால், இந்த தவறு நிகழ்ந்து விட்டது என தெரிவித்துள்ளார்
Tamilthamarai talk;
எத்தனை அலட்சியமான பதிலை இந்திய வெளியுறவு துறை அமைசர் தெரிவித்துள்ளார் ஒரு பேச்சு போட்டிக்கு போவதற்க்கு கூட ஆயிரம்-முறை அதை படித்து தன்னைதயார் செய்து_கொண்டு செல்லுகின்ற போது ஒரு-நாட்டின் பிரதிநிதியாக உலகநாடுகள்
கூடியிருக்கின்ற சபையில் பேசும்போது எத்தனை கவனமாக இருக்கவேண்டும் , இந்தியாவை பற்றி ஒரு வார்த்தை மாற்றி சொன்னார் என்பதற்காக ஹிட்லரை எதிர்நின்ற சுபாஷ் சந்திர போஸ் உன் உதவியே தேவையில்லை என்று திரும்பி வந்த போது தோன்றியபெருமை..இதோ இவர்களை போன்று உள்ளவர்களால் குலைந்து போகிறது
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.