அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்

 நெல்லை பாஜ வேட்பாளரை மிரட்டி வேட்பு மனுவை கையெழுத்து வாங்கி வாபஸ் பெற செய்துள்ளனர் என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜ தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிட தயங்கிய நிலையில் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பாஜ களத்தில் நிற்கின்றது. ஆனால், பல இடங்களில் பாஜ வேட்பாளர்கள் போட்டியிட கூடாது என்று மிரட்டப் பட்டும், தாக்குதலுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.

இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தால் மனுக் களை வாங்க மறுக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி பாஜ மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் கடந்த 3 நாட்களாக மிரட்டப்பட்டு வந்தார். இது தொடர்பாக கட்சிக்கும் தகவல் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அவரை மிரட்டி கையெழுத்து வாங்கி மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். மேலும், அவரை அதிமுகவில் சேர்த்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து தற்போது வலுத்து வரும் நிலையில் பெண் வேட்பாளர் மிரட்டப்படுகிறார், என்றால் தேர்தலில் பெண்கள் எப்படி நிற்க முடியும்.

எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற மோசமான நிலை தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது. மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பாஜவினரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீஸ் போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது எந்த விதத்தில் நியாயம். அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுவது கண்டிக்கத்தக்கது. இது அரசி யல் கட்சிகளை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்துவதாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் நாங் கள் தேர்தல் களத்தில் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறோம். இதற்கு பயந்து வேட்பாளர்களை மிரட்டுவது, தாக்குவது, மனுக் களை வாபஸ் பெற வைப்பது என்று ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் வெற்றி பெற கூடாது, போட்டியிடாமலே வெற்றி பெற வேண்டும் என்றே இது போன்ற நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில், தேர்த லில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கக்கூடிய கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பாஜ வேட்பாளர்களை மிரட்டினாலும் அதனை அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தேர்தல் ஆணையம் தேர்தல் நியாயமாகவும், நடுநிலையுடனும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறையில் பிரசாரம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...