மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிடவேண்டும் என்றும், ஆயுதங்ளை ஒப்படைத்தால் அவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சகத்தில் தனது 100 நாட்கள் பணிநிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
வன்முறை பாதையை தவிர்த்தால் இடதுசாரி தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியம். வன்முறையை கைவிட்டால் எந்த அமைப்புடனும் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயார். அவர்களின் கருத்தியல் வாதிகளைக் கூட பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறோம்.
பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில் எனது அமைச்சகம் முதல் 100 நாட்கள் கவனம்செலுத்தியது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு புலம் பெயர்ந்தோர் திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகஇருக்காது என்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.