சாலையில் சிகப்புசிக்னலை மீறுபவர்கள், சாலையில் தவறான பகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், மற்றும் அவசரகால ஊர்திகளுக்கு இடையூறு செய்பவர்கள் விரைவில் ரூ. 5 ஆயிரம் அபராதம் செலுத்த நேரிடும். மீண்டும் இந்த தவறை செய்பவர்கள் ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் அபராதம்செலுத்த நேரிடும்.
சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மசோதா 2014, என்ற புதியமசோதா பற்றி மக்கள் கருத்தைக் கேட்டு பரிசீலிக்க வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் சாலைவிபத்தில் பலியானாலோ அல்லது ஓட்டுனரின் அலட்சியத்தினால் பலியானாலோ காரணமான நபர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் முதல் 7 ஆண்டு சிறைத்தண்டனை வரை கொடுக்க இந்த மசோதாவில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. பள்ளி வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டும் ஓட்டுனர்கள் குற்றம் இழைத்தால் 3 ஆண்டுகள் சிறையும், ரூ.50,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம், அவர்களின் உரிமத்தை ரத்துசெய்யலாம் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்களை உடனடியாக ரத்துசெய்யவும், ரூ.25,000 அபராதம் விதிக்கவும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலையில் சிகப்புசிக்னலை மீறுபவர்கள், சாலையில் தவறானபகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், மற்றும் அவசரகால ஊர்திகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 3-ம் முறையாக விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 15,000 அபராதம் விதிக்கவும், ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும் கட்டாயபயிற்சி ஆகியவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சாலையில் தலைகவசம் அணியாமல் செல்பவர்கள் ரூ. 2, 500 அபராதம் செலுத்தவும், சாலையில் வாகனம் ஓட்டிசெல்லும் போது செல்போன் பயன்படுத்தினால் ரூ. 4,000 அபராதம் செலுத்தவும், பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும், மீண்டும் இந்தவிதிகளை மீறுபவர்கள் ரூ. 10 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கநேரிடும்.
சந்தையில் தவறான வாகனங்களை வெளியிடும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் இல்லாமல் வாகனத்தை விற்பனைசெய்யும் கார் டீலர்கள் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கவும் பரிந்துரைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குடித்து விட்டு சாலையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், இரத்ததில் மதுவின் அளவை கண்பிடித்து அவர்கள் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம்வரை அபராதமும், 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
"சாலைவிபத்துக்கள் மற்றும் இறப்பு பின்னால், வேகமாக வாகனம் ஓட்டுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் இருக்கையில் சீட்பெல்ட் ஆணியாமல் வாகனம் ஓட்டுதல் – தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய 3 முக்கிய காரணங்களை கருத்தில்கொண்டு இந்த பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது." சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் ஆண்டொன்றிற்கு 1.4 லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர்.
உலகிலேயே சாலைவிபத்து மரணங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. "இந்த புதியமசோதா விபத்தினால் பாதிக்கப்படுவோர்களுக்கு உடனடி ஆறுதலை தரும் . மேலும் லட்சக் கணக்கானோர் உயிரைப் பாதுகாக்கவும் உதவும் என்று சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது டிவிட்டரில் கூறியுள்ளார். இந்தமசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.