ஏழைகளை தன்னிறைவு பெற்றவர்களாக்கும் திட்டங்களை வகுக்க வேண்டும்

 ஏழைகளை தன்னிறைவு பெற்றவர்களாக்கும் திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தனது 64ஆவது பிறந்த நாளான புதன்கிழமை குஜராத்மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த மாநில அரசின் 11 புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும், ஏழைகளிடையே அவ நம்பிக்கையையும், அரசை சார்ந்திருக்கும் நிலையையும் ஏற்படுத்தும். இந்த திட்டங்களால், ஏழைகளிடையே தன்னம்பிக் கையையும், தன்னிறைவையும் ஏற்படுத்தமுடியாது. ஒரு வேளை அரசின் திட்டங்கள் நிறுத்தப்பட்டால், பசியால் ஏழைகள் உயிரிழந்து விடுவார்கள்.

தனதுவாழ்வில் பிறரை சார்ந்திருக்கும் நிலை ஒருவருக்கு இருந்தால், அந்தநபரால் எதையும்செய்ய முடியாது. அது போன்ற நிலையில், உயிர் வாழ்வதைவிட மரணிப்பதே நல்லது என்ற எண்ணம் தான் அவருக்கு ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் வாழ்பவர்களை, அதிலிருந்து மீட்டுக்கொண்டு வருவதைவிட வேறு சிறந்தபணி கிடையாது.

இந்லையை நம்மால் மாற்ற முடியாதா? கடவுள் நமக்கு கைகளையும் அறிவு, கல்வியையும் கொடுத்திருக்கிறார். அதுபோல் தான் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும், ஏழைகளுக்கும் கடவுள் கொடுத்துள்ளார். ஆகையால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் , அவர்களும் தன்னிறைவை அடையமுடியும். அத்தகைய வாய்ப்புகளை அவர்களுக்கு நாம் ஏற்படுத்தி கொடுத்தால், சுய மரியாதையுடன் அவர்களால் வாழமுடியும்.

நமது நாட்டின் சுயமரியாதை என்பது, நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் சுய மரியாதையை சார்ந்துள்ளது. இது (காந்தி நகர்), மகாத்மாகாந்தி வாழ்ந்த மண்ணாகும். இங்கிருந்து தான், நமக்கு தன்னம்பிக்கை, சுய மரியாதை, சுய சார்பு ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டது.

பால் உற்பத்தித்தொழிலில், நாட்டிலேயே குஜராத் முதலாவதாக உள்ளது. பெண்களின் கடின உழைப்பால்தான், குஜராத்தால் இதை சாதிக்கமுடிந்தது. தங்களது வீடுகளில், 10, 20, 25 பசுக்களை வளர்க்கும் இந்த பெண்கள்தான், உண்மையான தொழில் முனைவோர் ஆவர். இத்தகைய பெண்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

நமது நாட்டில், உணவுதானிய உற்பத்தி அளவுடன் ஒப்பிடுகையில் அதற்கேற்ப சேமிப்பு கிடங்குகள் இல்லை. நமது நாட்டில் விவசாயிகள் அதிகளவில் உணவு தானியங்களை உற்பத்திசெய்கின்றனர். ஆனால் சேமிப்புக் கிடங்குகள் போதிய அளவுக்கு இல்லாததால், உணவு தானியங்கள் வீணாகி விடுகின்றன.

எனவே, தங்களுக்கு தேவையான சேமிப்பு கிடங்குகளை கிராமத்தில் தாங்களே விவசாயிகள் கட்டிக் கொள்வதற்கு ஏன் ஊக்குவிக்கக்கூடாது? மத்திய அரசு பட்ஜெட்டில், இந்த திட்டம் தான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்ததிட்டத்தின் மூலமாக, தாங்கள் உற்பத்திசெய்யும் தானியங்களுக்கு உரியவிலையை விவசாயிகளால் பெறமுடியும் என்றார் பிரதமர் நரேந்திரமோடி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...